கேன்சர் வருமா...? கண் பார்வை பறி போகுமா...? உடம்புல என்ன நோய் இருக்கு...? 'எல்லாத்தையும் கரெக்ட்டா கணிச்சு சொல்லிடும்...' அது எப்படி சாத்தியம்...! - சாத்தியம் தான் அதோட பவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகண்பார்வை இழத்தல், இதய நோய்கள், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற நோய்களை முன்கூட்டியே கணித்து கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று ரெய்ஸ் 2020 மாநாட்டில் பேசிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 'செயற்கை நுண்ணறிவு’ மாநாட்டில் சமூக பிரச்னைகளை தீர்க்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை மேம்படுத்துவது, கற்றல் முடிவுகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பது, இந்தியாவுக்கான ஒட்டு மொத்த செயற்கை நுண்ணறிவு வாய்ப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மாநாட்டின் முதல் கூட்டத்தில், கூகுள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் மனீஷ் குப்தா பேசினார். அப்போது, ‘‘ சமூக தேவைகளை தீர்க்கும் விதமாக செயற்கை நுண்ணறிவின் சுறுசுறுப்பை அதிகளவில் பயன்படுத்துவது பற்றி பேசினார்.
வானிலை முன்னறிவுப்புக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். வெள்ளம் குறித்த எச்சரிக்கையை முன்கூடியர் இது தெரிவிக்கிறது என்றும் மனீஷ் குப்தா கூறினார்.
கண்பார்வை இழத்தல், இதய நோய்கள், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்களை முன்கூட்டியே கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவின் எல்லை என்பது மிகப் பெரியது என்றும், இதன் மூலமான தீர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனீஷ் குப்தா கூறினார்.
ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த கவுரவ் சர்மா பேசுகையில், “செயற்கை நுண்ணறிவில் இந்தியாவுக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன எனவும், உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற, நமது நாடு செயற்கை நுண்ணறிவு தலைமையிலான சமூகத்துக்கு மாற வேண்டும். அதற்காக செயற்கை நுண்ணறிவு அமைப்பை பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதாகவும் உருவாக்க வேண்டும்’’ எனவும் கவுரவ் சர்மா கூறினார்.
செயற்கை நுண்ணறிவு சூழலை மேம்படுத்தியதில், தெலங்கானா அரசின் சாதனைகள் இந்த மாநாட்டில் எடுத்து கூறப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில், ஐதராபாத்தை உலகின் முதல் 25 செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மையங்களில் ஒன்றாக மாற்ற, தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை ஊக்குவிக்க, தெலங்கானா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஐடிஇசி துறை முதன்மை செயலாளர் விளக்கினார்.
ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) இயக்குனர் சாலினி கபூர் பேசுகையில், ‘‘தனிப்பட்ட கல்விக்கும் அதே நேரத்தில் முறையான கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘ஒரு நாள் பிரதமர்’ ஆன 16-வது சிறுமி.. உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்..! எந்த ‘நாடு’ தெரியுமா..?
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு வேற வழி தெரியல’.. ‘என் பிள்ளைகளை காப்பத்தணும்’.. தாய் எடுத்த ‘கண்கலங்க’ வைக்கும் முடிவு..!
- 'சிறுநீர் பரிசோதனையில் நடிகை செய்த சீட்டிங்?'.. 'வெட்கக் கேடானது' என அதிகாரிகள் தகவல்! தடதடக்கும் போதைப்பொருள் வழக்கு!
- எங்க மண்ணுல எப்போ கால் வைக்க போறோம்...! 'காத்திருந்த தமிழக மாணவர்கள்...' 'எதிர்பாராத நேரத்தில்...' - நடிகர் சோனு சூட் செய்த மிகப்பெரிய உதவி...!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- '5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய போலீசார்...' 'எங்க வீட்டு குழந்தை மாதிரி தானே...' - போலீசாரின் மனிதாபிமானம்...!
- 'கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி பிரதிபாவுக்கு இருந்த பிரச்சனை!'.. 'பிரேத' பரிசோதனையில் பரபரப்பு 'திருப்பம்'!
- 'விடுதியில் மர்மமாக இறந்த'.. 'மருத்துவக் கல்லூரி' மாணவிக்கு 'கொரோனா' தொற்று 'இல்லை'.. வெளியான பரிசோதனை முடிவுகள்!
- 'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி?.. பிரம்மிக்கவைக்கும் படைப்பு!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- 'கொரோனாவைத் தடுக்க'... 'வெளிநாட்டிற்கு சென்ற'... 'இந்திய மருத்துவக் குழு'... காரணம் இதுதான்!