வீடு ஃபுல்லா கோடி கணக்குல பணம்.. "ஆனா அது என் பணமே இல்ல.." நடிகை விளக்கம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வீட்டில், கோடிக் கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | சாலை ஓரத்துல கிடந்த Bag.. உள்ள கட்டுக்கட்டா பணம்.. கொஞ்சம் கூட யோசிக்காம போலீஸ் கான்ஸ்டபிள் செஞ்ச காரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..!

கடந்த 2016 ஆம் ஆண்டு, கல்வித்துறை அமைச்சராக பார்த்தா சட்டர்ஜி இருந்த சமயத்தில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பாக முறைகேடு நடந்ததாக புகார் ஒன்று எழுந்திருந்தது.

தொடர்ந்து, தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் சமீபத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கணக்கில் வராத கோடிக்கணக்கிலான பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை சிக்கியதால், அமலாக்கத்துறை அதிகாரிகள், பார்த்தாவை கைது செய்தனர். அது மட்டுமில்லாமல், அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு இருந்தது. கோடிக்கணக்கிலான பணங்கள், மேற்கு வங்க அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விஷயம், இந்திய அரசியல் வட்டத்தில் சலசலப்பை உண்டு பண்ணியது. இது தொடர்பாக, பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அர்பிதாவின் வீட்டில் இருந்து, சுமார் 50 கோடி ரூபாய் பணமும், அது போக கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுவும் அதிகாரிகள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததையடுத்து, தொடர்ந்து இது பற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தனது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் தொடர்பாக அர்பிதா முகர்ஜி தெரிவித்துள்ள கருத்து, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது தன்னுடைய வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள் எதுவும் தனக்கு சொந்தமானது இல்லை என்றும், தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அதை யாரோ வீட்டுக்குள் வைத்து விட்டார்கள் என்றும் கூறி, கடும் குழப்பம் ஒன்றை அர்பிதா ஏற்படுத்தி உள்ளார். அத்துடன், "எனது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை, எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வைத்துள்ளனர்" என கூறிய அர்பிதா முகர்ஜி, இது போன்ற பண பரிவர்த்தனைகளில், தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து, இத்தனை கோடி பணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அது எப்படி அவருக்கே தெரியாமல் அங்கு இருந்தது என்றதும் சிலருக்கு கேள்வி எழுப்பாமல் இல்லை.

Also Read | "எது, என் அக்கவுண்ட்'ல ரூ.2,700 கோடியா??.." 100 ரூபா எடுக்க போன கூலி தொழிலாளிக்கு வந்த மெசேஜ்.. அடுத்து கொஞ்ச நேரத்துல நடந்த 'ட்விஸ்ட்'

MONEY, ARPITA MUKHERJEE, HOME, அர்பிதா முகர்ஜி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்