2600 ஷராமிக் சிறப்பு ரயில்கள்...! 'இன்னும் 10 நாட்களுக்கு...' 'சொந்த ஊர்களுக்கு அனுப்ப...' மத்திய இரயில்வே துறை அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொருளாதார தேவைக்காக வேற்று மாநிலத்திற்கு வந்த தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் முயற்சியில் இதுவரை 36 லட்சம் மக்கள் தங்களின் ஊர் சென்று சேர்ந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய இரயில்வே துறை.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அன்றாட வாழ்விற்கு தேவையான அடிப்படை பொருட்களுக்கும், பொருளாதாரத்திற்கும் கஷ்டப்பட்டு வந்தனர்.
பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது.
அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு இரயிலை இயக்கியது. இதன் மூலம் கடந்த 23 நாட்களில் 2600 ஷராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரை அடைந்துள்ளனர்.
பின்னுக்கு ஒரு சில தொழிலாளர்கள் அவதியுற்று வருவதால் அவர்களையும் சொந்த நிலத்திற்கு அனுப்ப மேலும் 10 நாட்களுக்கு சுமார் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இருக்கும் தொழிலாளர்களையும் பஸ் மற்றும் இரயில் மூலமும் வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய நடவடிக்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அனைவருக்கும் இலவசமாக உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்தியன் இரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'!.. எப்படி நடந்தது?
- ‘முதல்வரின் கோரிக்கையை ஏற்று’... ‘மத்திய அரசு நடவடிக்கை’... 'ஆனாலும், இந்த 2 நாளைக்கு மட்டும் சேவை இருக்கும்’!
- ரயிலில் பயணம் செய்வது எப்படி?.. அனைத்தையும் புரட்டிப் போட்ட கொரோனா!.. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
- ரயிலில் வந்த தொழிலாளர்கள்!.. தனிமை முகாமுக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு... மாநில அரசுக்கு புதிய சிக்கல்!
- 'சரக்கு ரயில் ஏறி 17 பேர் பலி...' 'தண்டவாளத்துல அசந்து தூங்கிட்டு இருந்தப்போ...' இந்தியாவை உலுக்கிய அடுத்த கோர நிகழ்வு...!
- 'ஊரடங்கு' முடிந்ததும்... ஏப்ரல் 15-லிருந்து 'ரயில்' சேவை 'தொடங்கப்படுகிறதா?'... ரயில்வே துறை வெளியிட்டுள்ள 'அறிக்கை'...
- ‘ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’... ‘ஆனால், இதிலிருந்து மட்டும் தான் புக் செய்ய முடியும்’... வெளியான தகவல்!
- இந்தியா முழுவதும் 'ரத்து' செய்யப்பட்ட ட்ரெயின்கள்... 'டிக்கெட்' கட்டணத்தை திரும்பப்பெற... 'இதை' மட்டும் செய்யுங்க!
- ‘கொரோனா அச்சுறுத்தல்’... ‘ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை’... எப்படி திரும்ப பெறலாம்?
- ‘கொரோனா’ அச்சுறுத்தலால்... ‘மார்ச் 31’ வரை அனைத்து பயணிகள் ‘ரயில்’ சேவை ‘ரத்து’... ‘விவரங்கள்’ உள்ளே...