ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிக்கெட் பரிசோதகரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனு சிங். 31 வயதான இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி பணி காரணமாக டெல்லிக்கு சென்றிருக்கிறார். அசாம் திப்ருகர் புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோனு, பரேலி நிலையத்தில் தண்ணீர் நிரப்ப கீழே இறங்கியிருக்கிறார். அப்போது, ரயில் நகர துவங்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சோனு, ஓடிச் சென்று ரயிலில் ஏற முயற்சித்திருக்கிறார்.
அப்போது, டிக்கெட் பரிசோதகர் சுப்பான் போர் அவரை கீழே தள்ளிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சமநிலை இழந்த சோனு ரயிலுக்கு கீழே விழுந்தார். இதன் காரணமாக அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்னொரு கால் கடுமையாக காயமடைந்திருக்கிறது. உடனடியாக சம்பவம் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
அங்கே அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும், சுயநினைவற்ற நிலையில் இருந்த சோனு கடந்த புதன்கிழமை மரணமடைந்ததாக ராணுவ மருத்துவமனை அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக சோனுவின் நண்பரும், அந்த ரயிலில் பயணம் செய்தவருமான சுபேதர் ஹரேந்திரா சிங் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில்,"டிக்கெட் சம்பந்தமாக சோனு - டிக்கெட் பரிசோதகர் சுப்பான் போர் இடையே வாக்குவாதம் வந்தது. பரேலி ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்ப கீழே இறங்கினார் சோனு. ரயில் நகர துவங்கவே, அவர் ஓடிவந்து ரயிலில் ஏற முயற்சித்தார். அப்போது, போர் அவரை கீழே தள்ளிவிட்டார். இதனால் ரயிலுக்கு அடியே சென்ற சோனுவின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இன்னொரு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன" என புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் சுபேதர் ஹரேந்திரா சிங்.
இதனிடையே டிக்கெட் சம்பந்தமாக எழுந்த வாக்குவாதத்தில் போர், சோனுவை கீழே தள்ளிவிட்டதாக ரயில்வே அதிகாரிகளும் காவல்துறையில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர் சுப்பான போரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரித்துவரும் காவல் ஆய்வாளர் அஜித் பிரதாப் சிங் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுராவில் 581 கிலோ போதைப் பொருளை திண்ற எலிகள்?.. நடந்தது என்ன? கோர்ட்டில் விளக்கமளித்த போலீசார்!
- ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
- ராணுவ சீருடையில் 4 மாதங்கள் வேலை பார்த்த பிறகு.. இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!!.. பணத்தையும் இழந்த பரிதாபம்..
- மகளை சுட்டுக் கொன்ற தந்தை, உடலை சூட்கேசில் வைத்து மறைக்க உதவிய தாய்.. உறைய வைக்கும் ஆணவக்கொலை.!
- புனே நெடுஞ்சாலை விபத்தை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து.. என்ன நடந்தது?
- "வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!
- திருமணத்தை மீறிய உறவு.. பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.. 4 வருஷத்துக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட கணவரின் சடலம்..!
- "ஹேப்பி பர்த்டே ஆட்டுக்குட்டி".. DJ பார்ட்டி எல்லாம் வச்சு அமர்க்களப்படுத்திய உரிமையாளர்.. யாரு சாமி இவங்க..!
- எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா.. நடுரோட்டில் பர்த்டே கேக் வெட்டிய ரக்கடு பாய்.. ஸ்பாட்லயே போலீஸ் கொடுத்த தண்டனை.. வீடியோ..!
- பூட்டிய ரயில் கழிவறைக்குள் சடலமாக கிடந்த நபர்.. 900 கிமீ கடந்த பிறகு தெரிய வந்த உண்மை!!.. குலை நடுங்கிப்போன பயணிகள்