38 வருஷத்துக்கு முன்னாடி காணாமல்போன ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிப்பு .. முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற நல்லடக்கம்.. கலங்கிப்போன மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

38 வருடங்களுக்கு முன்னர் பனிச்சரிவில் சிக்கி காணாமல்போனதாக நம்பப்பட்ட ராணுவ வீரரின் உடலை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவருடைய உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது பலரையும் கலங்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்.. காதலியை கரம்பிடித்த வாலிபர்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் பலரையும் திகைக்க வச்சிருக்கு..!

சந்திரசேகர் ஹார்போல்

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி என்னும் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஹார்போல். கடந்த 1971 ஆம் ஆண்டு, ராணுவ வீரராக பனிபுரிந்து வந்த சந்திரசேகர், 1984 ஆம் ஆண்டின் போது பாகிஸ்தானை எதிர்த்து போராடுவதற்காக "ஆபரேஷன் மேக்தூத்" என்ற பெயரில் உள்ள குழுவில் ஒருவராக இருந்துள்ளார். இதற்காக, உலகின் மிக உயரமான போர்க்களம் என அறியப்படும் சியாச்சன் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், சந்திரசேகர் உட்பட 5 பேர், பனிச்சரிவில் சிக்கி மாயமானார்கள். கடந்த 38 ஆண்டுகளாக இவர்கள் பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், அவரின் உடல் பாகங்கள், சியாச்சன் பகுதியில் உள்ள பழைய பதுங்கு குழியில் அடையாளம் காணப்பட்டது. அவரது உடல் பாகங்களுடன் கிடந்த அடையாள பேட்ஜ் மூலம், சந்திரசேகர் தான் என்பதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அஞ்சலி

இதனையடுத்து அவரது உடல் ஹல்த்வானியில் உள்ள சரஸ்வதி விஹார் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது, அங்கு உள்ளூர் மக்கள் மற்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் கணேஷ் ஜோஷி, ரேகா ஆர்யா, மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா மற்றும் பல ராணுவ அதிகாரிகள் ஹர்போலாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ராணிபாக் பகுதிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய உத்திரகாண்ட் மாநில முதல்வர்,"சந்திரசேகர் ஹார்போல் அவர்களின் தியாகம் எப்போதும் மக்களால் நினைவுகூரப்படும். அவருடைய குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்" என்றார்.

38 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல்போன ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது, பொதுமக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

Also Read | "என்னை விட 10 வயது மூத்த பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க".. புது மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. பதறிப்போன உறவினர்கள்.!

UTTARAKHAND, ARMY, MILITARY HONOURS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்