'இந்த தடுப்பூசி இந்தியர்களுக்கா'?... 'அப்போ இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா'?... கொதித்தெழுந்த சுப்பிரமணியன் சுவாமி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவிற்கு வரவுள்ள தடுப்பூசி குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா. அதன் தாக்கம் இன்னும் அகலாத நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவிற்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறது. இருப்பினும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியைப் பொறுத்தவரை இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது.

இதனிடையே கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் அவசரக் கால பயன்பாட்டுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதனை முதலில் சுகாதார பணியாளர்களுக்குச் செலுத்தவும் முன்னேற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த தடுப்பூசியின் 7½ கோடி ‘டோஸ்’களை தயாரித்து கைவசம் வைத்திருப்பதாகவும், இந்த வாரத்தில் அது 10 கோடி ‘டோஸ்’களாக உயரும் என்றும் இந்திய சீரம் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் உமேஷ் சாலிகிராம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்காத நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா  தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா?'' எனக் கடுமையாகக் கேட்டுள்ளார். அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிக்குச் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்