'வந்தாச்சு ஐபோன் 11'...'இனிமேல் 'செல்ஃபி' இல்ல'...'ஆண்ட்ராய்டு' போன்களுக்கு சவால் விடும் கேமரா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. பல புதுமைகளைபுகுத்தி அட்டகாசாக வெளிவந்துள்ளது ஐபோன் 11.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்தாலே ஐபோன் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த மாதம் தான் ஐபோன் தனது புதிய படைப்புக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபோன்-11, ஐபோன்-11‌ ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதனுடைய விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினார்.

புதிதாக வெளியாகியுள்ள ஐபோன் 11 மாடல்களில் ஏகப்பட்ட புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஐபோன் 11 முன்பக்க கேமராவில் ஸ்லோமோஷனில் போட்டோ எடுக்க முடியும். இதற்கு ஸ்லோஃபி என பெயர் வைத்துள்ளனர். மேலும் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட போன்களிலேயே சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11  ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐபோனில் பெரிய குறைபாடாக கருதப்படுவது அதன் பேட்டரி தான். ஆனால் ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP WideCamera, 12MP TelePhoto Camera, 12MP Altra Wide Camera வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் 1‌1 மாடல், 64,900 ரூபாய்க்கும், ஐபோன்-11 ப்ரோ மாடல் 99,900 ரூபாய்க்கும், ஐபோன் ‌-11 ப்ரோ மேக்ஸ் மாடல் 1,09,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச், மேக்புக் மற்றும் ஐபேட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விற்பனை செப்டம்பர் 27ம்தேதி தொடங்குகிறது.

APPLE, IPHONE 11, APPLE WATCH, IPHONE 11 PRO, APPLE 11 PRO MAX, IPADOSV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்