'நான் யார் தெரியுமா?' .. எம்.எல்.ஏவின் மகன் பேசிய பேச்சு.. டிராஃபிக் போலீஸார் செய்தது என்ன தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் டிராஃபிக் ரூல்ஸை மீறியதாகவும், அதன் பின்னர் டிராஃபிக் போலீஸாரிடம் அநாகரிகமாக பேசியதாகவும், அடித்ததாகவும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹைதராபாத்தில் மாதாபூர் மீனாட்சி டவர் அருகே டிராஃபிக் விதிகளை மதிக்காமல், போகக் கூடாத வழியில் காரை செலுத்த முற்பட்டுள்ளார், நடப்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ சமினேனி உதயபானுவின் மகன் பிரசாத். குடும்பத்துடன் காரில் வந்த இவரை அங்கிருந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் கிருஷ்ணா குரல் கொடுத்து தடுத்துள்ளார்.

அதன் பிறகு இறங்கிவந்த பிரசாத், கான்ஸ்டபிள் கிருஷ்ணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ரெட்டி அங்கு வந்து பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை பலனின்றி போக, ‘நான் யார் தெரியுமா? எம்.எல்.ஏ மகன்’ என்று ஏகபோகமாக பேசியதாகவும், இதன் தொடர்ச்சியாக ராஜகோபால் ரெட்டியை பிரசாத் தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனால் உடனடியாக பிரசாத் மீது 352 மற்றும் 332 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அப்போது பிரசாத்தின் குடும்பத்தினரும் சண்டைக்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANDHRAPRADESH, MLA, TRAFFICPS, ROADRULES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்