'சம்மதமான்னு ஒரு வார்த்தை கூட கேட்கல...' தாலிக்கட்ட போறதுக்கு முன்னாடி டக்குன்னு ஒரு 'துண்டுசீட்டை' எடுத்து நீட்டிய மணப்பெண்...! - கல்யாண வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும் ஆனந்தபுரம் முதுகுப்பா பகுதியைச் சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்களால் நிச்சயித்தபடி கதிரியில் உள்ள கோயிலில் இன்று காலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் பெண் வீட்டார் திருமணத்திற்கு வரதட்சணையாக 1,50,000 ரூபாய் பணமும் 13 சவரன் நகைகளை மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துள்ளனர்.

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் எப்போதும் போல திருமணத்தை செய்து கொள்ளும் மணமகளுக்கு சம்மதமா என்ற கேள்வி கேட்கப்படவில்லை.

திருமண விழாவிற்காக இருவீட்டாரும் கோயிலுக்கு வந்த நிலையில், இரவு நலங்கு சடங்குகளும் முடிந்துள்ளன. அதன்பின் தான் படங்களில் வருவது போல ஒரு திருப்பு முனை நடந்துள்ளது.

திருமணம் பிடிக்காத மணப்பெண், தாலிக்கட்ட போறதுக்கு முன்னாடி ஒரு துண்டு சீட்டை எடுத்து நீட்டியுள்ளார். அதில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதாகவும், திருமணத்தை நிறுத்துமாறும் குஷ்மா கூறியுள்ளார். ஆனால் இரு வீட்டரோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை என அந்த சான்றிதழை பொருட்படுத்தாமல் மீண்டும் திருமண ஏற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கடுப்பான மணப்பெண் குஷ்பா கதிரி காவல்நிலையம் சென்ற, தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடத்துவதாக உண்மையை கூறியுள்ளார். அதன்பின் கொரோனாவால் நிற்காத கல்யாணம் போலீசாரால் நிறுத்தப்பட்டது.

அதன்பின் திருமணத்திற்காக பெண் வீட்டார் கொடுத்த பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களை பேசித்தீர்த்துகொள்ளுமாறு போலீசார் கூறி கூட்டத்தை கலைத்துவிட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்