இரண்டே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. வாந்தி, மயக்கம் என அதிரவைத்த ‘மர்ம நோய்’.. இதுதான் காரணமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் மர்ம நோய் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதில் பலருக்கும் வாந்தி, மயக்கம், வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மர்ம நோய் பரவியுள்ளதாக தகவல் வேகமாக பரவியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் எந்த வித வைரஸ் தொற்றும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் முகாம்கள் அமைத்து வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். இரண்டே நாட்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த நோய் குறித்து ஆராய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆந்திரா வந்தது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதியில் கள ஆய்வு நடத்தியதுடன், மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தனர். மேலும் மாநில அரசின் உத்தரவுப்படி ஏலூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் தண்ணீர் மற்றும் மக்கள் வாங்கும் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தற்போது பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் கிராம மக்கள் பயன்படுத்திய தண்ணீர் மற்றும் பாலில் ஈயம் போன்ற ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கலப்படம் எப்படி நடந்தது? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது மர்ம நோய் இல்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: ‘கொரோனாவுக்கே சவால் விடும் கொடிய நோய்!’.. ஆந்திராவில் இருக்கும் இடத்தில் இருந்தே சுருண்டு விழும் மக்கள்... வெளியான சிசிடிவி காட்சிகள்.. வீடியோ!
- 'வானில் இருந்து வந்து விழுந்த தீப்பந்து?'.. ‘90 பேர் வரை பார்த்த அபூர்வ நிகழ்வா?’.. பரபரப்பு தகவல்!
- 'ஏற்கெனவே கொரோனா போட்டு தாக்குது.. இந்த நிலைமையில'.. திடீரென பரவும் பயங்கர நோய்கள்.. அவசர எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!
- ‘சிவப்பு சாயம்’.. கால் வளையத்தில் ‘மர்ம எண்கள்’.. பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறா?.. பீதியில் மக்கள்..!
- கொரோனா என்பது ஃபேமிலி பேராம்... ஒரிஜினல் பேரை அறிவிச்சிருக்காங்க WHO... ஏன்? எதற்கு?... தகவல் உள்ளே...
- 'கல்யாணம் பண்றேன்'னு சொன்னான்'...'நம்பி போன பொண்ணு'...காஞ்சிபுரத்தை அதிரவைத்த 'கர்ப்பிணி' மரணம்!
- 'லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிதான நோய்'... 'உயிருக்குப் போராடும் இந்தியப் பெண்'... 'இங்கிலாந்தில் வருங்கால மனைவிக்காக போராட்டம்'!