'கனவுல கூட நினைக்க கூடாது'...'என்ன சொல்கிறது புதிய சட்டம்'?...'ஜெகன்' அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டமசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதன்படி அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு 21 நாட்கள் அதாவது 3 வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்ற முக்கிய சரத்து பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் இன்று ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்படும் போது ஆந்திரா மாநிலம் தான் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

TELANGANA, ANDHRA PRADESH, DISHA ACT, 21 DAYS, WOMEN SAFETY LAW, AP CABINET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்