20-க்கும் மேற்பட்ட 'உயிரிழப்பு'.. நள்ளிரவில் பெய்த கனமழை.. சோகத்தில் மூழ்கிய மும்பை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் மற்றொரு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை சுமார் 7-ஆக இருக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை மஹாராஷ்டிராவின் மும்பையின் வடமேற்குப் பகுதிக்குட்பட்ட மாலாத் பகுதியில், பெய்து வரும் கனமழையால் சுவர்கள் இடிந்து விழுந்ததில் கடந்த செவ்வாய் அன்று சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று காலை (ஜூலை 02,2019) புனே மாவட்டத்துக்குட்பட்ட சிங்காட் கல்லூரியின் சுவர், இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மொத்தமாக புனே மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து மட்டும், 20 முதல் 23 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த மழைவிபத்துக்களில் காயமடைந்தோர்களும் தேசிய பேரிடர் மீட்புப் படைப்பிரிவினரால்  மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனையடுத்து, அடுத்து கனமழையுடன் கூடிய பேரிடர் ஆபத்து இருக்கும் என்று மும்பையில் எச்சரிக்கை செய்யப்பட்டுவருவதால், இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 3, நாள்களுக்கு இந்த கனமழை நீடிக்கும் என்பதால், முக்கிய ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதர நிறுவனங்கள் பலவற்றுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெய்துவரும் இந்த கனமழையால், மும்பையின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையே காணப்படுகிறது.

PUNE, MAHARASHTRA, MUMBAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்