"அந்த மனசுதான்யா கடவுள்".. அரியவகை நோயால் தடுமாறிய குழந்தை. பெயரை கூட சொல்லாம 11 கோடி கொடுத்த மர்ம மனிதன்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சாரங் மேனன். இவரது மனைவி பெயர் ஆதித்தி. இவர்கள் இருவரும் தற்போது மும்பையில் வசித்து வரும் சூழலில் இந்த தம்பதியருக்கு சுமார் 15 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே, அந்த குழந்தைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நல கோளாறு உருவானதாக சொல்லப்படுகிறது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன்".. வேலைக்கு போயிட்டு வர்ற் மனைவி வீடியோவை எடிட் செஞ்சு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி வீடியோ!!

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி’ என்ற அரிய வகை மரபணு கோளாறு இருப்பது தெரிய வந்தது. இந்த நோயானது உடலில் உள்ள தசைகளை பலவீனம் அடைய செய்து அதனை இயங்க முடியாமல் செய்யும் என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதனை அறிந்ததும் பெற்றோரான சாரங்கி மாற்றும் ஆதித்தி ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களின் குழந்தையின் நோய்க்கான சிகிச்சைக்கு மொத்தம் 17 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர்களால் பணம் செலுத்தவும் முடியவில்லை. இதனால், ஆன்லைன் மூலம் பலரிடம் நன்கொடை வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி மிலாப் என்ற கிரவுட் ஃபண்டிங் தளத்திலும் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

தொடர்ந்து இது தொடர்பாக பலரும் பதிவுகளை பகிர்ந்து வந்த சூழலில், மலையாள நடிகை ஒருவரும் சாரங் - ஆதித்தி தம்பதியின் குழந்தைக்கு உதவி கேட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி இருக்கையில் இந்த மிலாப் கிரவுட் ஃபண்டிங் தளத்தில் மொத்தம் 56,000 பேர் நன்கொடை வழங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் மூலம் ரூபாய் 15 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ள சூழ்நிலையில், இதில் பெயர் வெளியிட விரும்பாத ஒரே ஒரு நபர் மட்டுமே சுமார் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனால் மொத்தம் 16 கோடி ரூபாய் வரை நன்கொடை திரட்டப்பட்டுள்ள சூழலில் அந்த குழந்தையின் பெற்றோரான சாரங் மற்றும் ஆதித்தி ஆகியோர், தங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் சிகிச்சை செலவுக்கு இன்னும் சில லட்சங்கள் தான் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே போல, சுமார் 11 கோடி ரூபாயை தனியாளாக செலுத்திய அந்த பெயர் வெளியிடாத மர்ம நபருக்கும் நன்றி தெரிவித்த அந்த குழந்தையின் பெற்றோர், இந்த நன்கொடையாளர் யார் என்பது தெரியவில்லை என்றும் ஆனால் இந்த நேரத்திற்கு எங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது என்றும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

15 மாத கைக்குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் 11. 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள சம்பவம் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

Also Read | துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து 11 நாள் கழிச்சு மீட்கப்பட்ட நபர்.. வந்ததும் தெரியவந்த நெகிழ்ச்சி தகவல்!!

KERALA, DONOR, DONATE, CHILD TREATMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்