‘ஷூட்டிங் நடத்தலாம், கிரிக்கெட் விளையாடலாம், ஆனா இதை மட்டும் பண்ணக்கூடாதா..?’.. அனில் அம்பானியின் ‘மகன்’ பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிராவில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ்-ன் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால் அங்கு பகுதி நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன்மோல் அம்பானி தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

29 வயதாகும் அன்மோல் அம்பானி, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் ஊடக வெளிச்சம் தன் மீது படாத அளவுக்கு அன்மோல் அம்பானி எப்போதும் ஒதுங்கியே இருக்கக் கூடியவர்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அன்மோல் அம்பானி கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘நடிகர்கள் இரவு நேரங்களில் ஷூட்டிங் நடத்தலாம். கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம். அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தலாம். ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களை செய்யவும், தொழிலாளர்கள் தங்களது வேலையை செய்ய மட்டும் கூடாதா?’ என அன்மோல் அம்பானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், ‘கொரோனா என்பது இன்றைய புதிய மத வழிபாட்டு முறை ஆகிவிட்டது’ என அன்மோல் அம்பானி காட்டமாக பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊரடங்கு குறித்து அன்மோல் அம்பானி பதிவிட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்