கிச்சடியில் அதிகமாக இருந்த உப்பு.. கோவத்துல கணவன் செஞ்ச விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிச்சடியில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியை கடுமையாக தாக்கிய கணவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.

Advertising
>
Advertising

கிச்சடி

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது பயந்தர் டவுன்ஷிப். இதில் 46 வயதான நிலேஷ் காக் தனது மனைவி நிர்மலாவுடன் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை உணவு சாப்பிட வந்திருக்கிறார் நிலேஷ். அவருக்கு அரிசி மற்றும் பருப்பில் செய்யப்பட்ட கிச்சடியை நிர்மலா பரிமாறியிருக்கிறார். அப்போது கிச்சடியில் உப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தனது மனைவி நிர்மலாவுடன் நிலேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, நிர்மலாவை கடுமையாக தாங்கியிருக்கிறார் நிலேஷ். இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே நிர்மலா மரணமடைந்திருக்கிறார்.

கைது

இதனிடையே நிலேஷ் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் அதிகமாக சத்தம் எழவே, அங்குகூடிய அக்கம் பக்கத்தினர் நிர்மலாவின் நிலையை அறிந்து திடுக்கிட்டனர். உடனே காவல்துறைக்கு இதுகுறித்து அண்டைவாசிகள் புகார் கொடுத்திருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த நவ்கர் நகர் காவல்துறையினர் நிலேஷை கைது செய்தனர். இதுகுறித்து பேசிய மீரா பயந்தர்-வசாய் விரார் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி ஒருவர்,"நிலேஷ் காக் (46) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது மனைவி சமைத்த கிச்சடி மற்றும் காலை உணவாக அவருக்கு பரிமாறியதில் அதிக உப்பு இருந்ததால் அவர் கோபமடைந்ததாக தெரிகிறது" என்றார்.

நிலேஷின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். மேலும், நிர்மலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த கொலைச் சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் மனைவி சமைத்த கிச்சடியில் உப்பு அதிகம் இருந்ததாக கணவன் சசெய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

POLICE, THANE, KICHADI, தானே, கிச்சடி, போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்