"இப்படி எல்லாமா கவனம் இல்லாம இருக்குறது".. பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி.. ஒருசில நிமிடத்தில் அரங்கேறிய துயரம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை அடுத்த தூளூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28). இவர் கந்துக்கூர் என்னும் பகுதியில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertising
>
Advertising

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நீங்க டைட்டில் வின்னர் இல்ல, Total Winner".. விக்ரமனுக்கு 'திருமாவளவன்' கொடுத்த பெயர்.. கூடவே கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு!!

இதனிடையே, கடந்த சில தினங்கள் முன்பாக இரவு நேரம் தனது கடையை மூடி விட்டு திரும்பும் நேரத்தில், பஸ் நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவரை மணிகண்டா கண்டுள்ளதாக தெரிகிறது.

அந்த சமயத்தில் அவரிடம் இருந்த பாம்பை தனது கழுத்தில் போட்டு விடும்படியும் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு அந்த பாம்பாட்டி ஒப்புக் கொள்ளவில்லை என்ற சூழலில், தொடர்ந்து மணிகண்டா கெஞ்சி கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

ஆனாலும் ஒத்துக் கொள்ளாத பாம்பாட்டியை தொடர்ந்து வற்புறுத்தி வந்த மணிகண்டா, பணம் தரலாம் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு செல்ஃபி மட்டும் பாம்புடன் எடுத்துக் கொள்கிறேன் என்றும், கழுத்தின் மீது ஒரு நிமிடம் மட்டும் விடும்படியும் தொடர்ந்து மணிகண்டா கூற, இறுதியில் பாம்பாட்டியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாம்பபை கழுத்தில் மீது வைத்ததும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார் மணிகண்டா. இதனையடுத்து, பாம்பை தோளில் இருந்து அவர் திரும்பி எடுக்க முற்பட்ட போது, அது மணிகண்டாவை எதிர்பாராத விதமாக கடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், அலறித் துடித்த மணிகண்டாவை அரசு மருத்துவமனைக்கும் அங்கிருந்தவர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே மணிகண்டா இறந்து விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் வழக்குப் பதிசிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர், உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "மாங்கல்யம் தந்துனானேனா".. கே எல் ராகுலை தொடர்ந்து.. படுஜோராக நடந்த பிரபல இந்திய வீரரின் திருமணம்.. வாழ்த்தும் பிரபலங்கள்

ANDHRA PRADESH, YOUTH, SELFIE, SNAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்