எங்க கிராமத்துல 'சரக்கு கடை' ஓப்பன் பண்ண போறீங்களா...? இல்லையா...? 'போராட்டத்தில் குதித்த பெண்கள்...' என்னங்க இப்படி இறங்கிட்டீங்க...? - எங்களுக்கு வேற வழி தெரியலங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவின் ஒரு கிராமத்தில் பெண்களே 'எங்கள் பகுதியில் உடனடியாக மதுக்கடை திறக்க வேண்டும்' என சாலையில் இறங்கி போராடியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக ஒரு ஊரில் மதுக்கடை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காகவே பெண்கள் வீதிகளுக்கு வந்து போராடியிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், ஆந்திர பிரதேச மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள பெடமெடப்பள்ளி எனும் கிராமத்தில் தங்கள் ஊரில் மதுக்கடை திறக்க வேண்டும் என பெண்கள் போராடியுள்ளனர்.

இதுகுறித்து அக்கிராம மக்களிடம் கேட்டபோது, எங்களுக்கும் எங்கள் ஊர் ஆண்கள் மதுக்கடைக்கு போகக்கூடாது, குடிக்க கூடாது என்பது ஆசை தான். ஆனால், இப்போது எங்களையே போராட வைத்துள்ளனர்.

இதற்கு காரணம் எங்கள் ஊர் ஆண்கள் குடிப்பதை நிறுத்தாமல் பல மைல் தூரம் சென்று பிளாக்கில் வாங்கி குடிக்கின்றனர். அதோடு, அந்த சாராயத்தின்  விலை சாதாரண விலையை விட இருமடங்கு அதிகமாக உள்ளது.

வேறு வழியில்லாமல் எங்கள் ஊர் ஆண்களும் அதிக விலையை கொடுத்து குடிக்கிறார்கள். இதனாலேயே எங்களின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவே எங்கள் கிராமத்தில் மதுக்கடை இருந்தால் இங்கேயே குறைந்த விலைக்கே மதுவை வாங்கிவிடலாம். அதனால் தான் நாங்கள் மதுக்கடை வேண்டும் என போராடுகிறோம்' என அப்பெண்கள் தெரிவித்தனர்.

ANDHRA, BAR, STRUGGLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்