'என் கண்ணு முன்னாடியே நீங்க கஷ்டப்படுறத பார்க்க முடியல மா!'.. பாசத்தந்தை எடுத்த விபரீத முடிவால்... வேரோடு அழிந்த குடும்பம்!.. 'வேண்டாம் ப்ளீஸ்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தகவலறிந்த 2 மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. இவருக்கு ஸ்வேதா, சாயி என 2 மகள்கள் இருந்தனர். ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 2வது மகளான சாயி அருகே உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்வேதாவின் திருமண வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அவருடைய கணவன் சுரேஷ் குமார் ரெட்டி ஸ்வேதாவை தினமும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தனது மகள் அனுபவிக்கும் கொடுமைகளை மனரீதியாக தாங்க இயலாத பாபு ரெட்டி தன்னுடைய மரணத்திற்கு மருமகன் சுரேஷ்குமார் ரெட்டிதான் காரணம் என்று செல்பி வீடியோ பதிவு செய்துவிட்டு வீட்டின் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பாபு ரெட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே, தனது தந்தையின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத ஸ்வேதா, சாயி ஆகிய இருவரும் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தில் நடைபெற்ற மூன்று பேர் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார் சுரேஷ்குமார் ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மகன் பெரியவனாகிட்டானு சொல்லியும் திருந்தல'... 'எவ்ளோ பொறுத்தும் அன்னிக்கு பையன் முன்னாடியே'... 'கணவர் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்'...
- 'பேக் டு ஹோம்'... 'மனதை நொறுக்கும் கடைசி பேஸ்புக் பதிவு'... 'மனைவி, மகளுடன் மகிழ்ச்சியோடு கிளம்பியவருக்கு கடைசியில் நேர்ந்த துயரம்'...
- ''சினிமா'ல நடிக்க போறேன்'!.. இலங்கை தாதா அங்கோட லொக்கா கொலையில் 'திடீர்' திருப்பம்!.. ஆதார் அட்டையில் அதிர்ச்சி பின்னணி!
- வீட்டில் காதலனுடன் தனியாக இருந்த 'இளம்பெண்'... 'ரூம்' லாக் பண்ணிட்டு 'பொண்ண' பெத்தவங்களே,,.. 'உ.பி' மாநிலத்தையே 'நடுங்க' வைத்த 'கொடூரம்'!!!
- 'கோயிலுக்கு உள்ள வச்சு கல்யாணம்...' 'வெளிய வச்சு தற்கொலை...' - கல்யாணம் முடிச்ச கையோடு எடுத்த விபரீத முடிவு...!
- 'அம்மா வீட்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துஞ்சுப்பா...' 'வருத்தப்பட்ட மகன்...' - வெறியான தந்தை செய்த கொடூரம்...!
- 'புகையிலை வாங்க போன பாட்டி...' 75 வயது என்றும் பாராமல்...' 'சீரழித்த இளைஞர்கள்...' - மகனுக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது...!
- 3 ரோலக்ஸ் வாட்ச்... ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே கார்... ஒத்த பேப்பர் வச்சு சொகுசு வாழ்க்கை... தலைக்கு தில்ல பாத்தீங்களா!?
- ராத்திரி நேரத்துல... 'புருஷன' அடிச்சி போட்டுட்டு... அவரு 'கண்ணு' முன்னாடியே... நள்ளிரவில் 'பைக்'கில் வந்த நபர்களால்.... 'மனைவி'க்கு நேர்ந்த 'கொடூரம்'!!!
- அமெரிக்காவில் இந்திய ஆராய்ச்சியாளர் நடுரோட்டில் படுகொலை!.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!.. நொறுங்கிப் போன குடும்பம்!