"ஒரு பொண்ணுக்கு 3 முறை கல்யாணமா.?".. இந்த கிராமத்தில் தொடரும் வியக்க வைக்கும் கலாச்சாரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் வசித்துவரும் ஒரு பழங்குடியின மக்கள், பெண்களுக்கு 3 முறை திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தை பல்லாண்டுகளாக தொடர்ந்து வருகின்றனர்.
திருமணம்
ஆந்திரா - ஒடிசா எல்லையில் அதிககளவில் வசித்துவருகிறார்கள் மாலிஸ் பழங்குடியை சேர்ந்த மக்கள். இவர்கள் வினோதமான கலாச்சாரத்தை காலங்காலமாக பின்பற்றிவருகின்றனர். இங்கே உள்ள பெண்களுக்கு மூன்று முறை திருமணம் செய்து வைக்கிறார்கள் இந்த மக்கள். 5 வயதினை அடைவதற்கு முன்பும், பெண்கள் பூப்படையும்போதும் பின்னர் திருமணத்திற்கு உரிய வயதை எட்டும்போதும் என பெண்களுக்கு மூன்று முறை திருமணம் நடைபெறுகிறது.
மாப்பிள்ளை இல்லாமல் திருமணம்
இந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 5 வயதிற்குள்ளாகவே முதல் திருமணத்தை நடத்துகிறார்கள். இதில் மணமகன் என யாரும் இருக்கமாட்டார். கிராம மக்களே திருமணத்தில் நடைபெறுவது போன்ற சடங்குகளை செய்து இந்த திருவிழாவை வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றனர். அதேபோல, பெண்கள் பூப்படைந்த பிறகும் இதுபோலவே திருமண வைபவம் நடைபெறுகிறது.
இறுதியாக, பெண்கள் திருமணத்திற்கு உரிய வயதினை எட்டும்போது வழக்கம்போல, ஒரு இளைஞரை பார்த்து திருமணம் செய்துகொடுக்கிறார்கள் இம்மக்கள். பெண்கள் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளனர் இந்த மக்கள்.
என்ன காரணம்?
இந்த பழங்குடி மக்கள் பெண் குழந்தைகளை கொண்டாடுவதையே தங்களது பண்பாடாக கருதுகின்றனர். பெண் குழந்தைகள் பிறந்தால் பெரிதும் மகிழும் இந்த மக்கள், ஊர் கூடி தங்களது பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த ஆர்வம் காட்டுகின்றனர். வசதி குறைவாக இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மொத்த ஊரே சேர்ந்து நின்று செலவழித்து திருமணம் செய்வது இவர்களுடையே பிணைப்பின் சாட்சியாக அறியப்படுகிறது.
குழந்தை திருமணங்களை ஏற்காத இந்த கிராம மக்கள், தங்களது பல்லாண்டு கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த திருமணங்களை நடத்திவந்தாலும், பெண்கள் திருமணத்திற்கான வயதை எட்டிய பிறகே முறைப்படி திருமணம் செய்துகொடுக்கின்றனர்.
காதலுக்கு பச்சைக்கொடி
பெண்களையும் அவர்களது முடிவுகளையும் மதிக்கும் வழக்கம்கொண்ட இந்த மக்கள் திருமண வயதை எட்டிய பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்க்கு முன்பு, அவர் காதலிக்கிறாரா? என்பதையும் கேட்டு அறிந்துகொள்கின்றனர். ஒருவேளை அந்தப் பெண் யாரையாவது விரும்பினால் அவரையே திருமணமும் செய்து வைக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் ஊரே அந்தப் பெண்ணிற்கு உரிய மாப்பிள்ளையை கண்டறிந்து திருமணம் நடத்துகிறது.
தங்களது முன்னோர் காட்டிய வழியில் பயணிப்பதாக கூறும் இந்த மக்கள், பெண் குழந்தைகளை கொண்டாடும் நோக்கில் ஊர்கூடி திருமணம் நடத்திவரும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்.. நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்!
- சாப்பாட்டு பந்தி Open பண்ணதும் உறவினர்கள் செய்த காரியம்.. கல்யாண வீட்ல நடந்த ருசிகரம்.. வைரலாகும் வீடியோ..!
- 28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு? மீண்டும் வைரலாகும் வீடியோ..!
- புயலால் கொந்தளிச்ச கடல்.. கொஞ்ச நேரத்துல கரையொதுங்கிய தங்க நிற தேர்.. ஆந்திராவில் பரபரப்பு..வைரல் வீடியோ..!
- கல்யாண வீட்டுல கேட்ட பயங்கர சத்தம்.. மணப்பெண்ணின் நண்பர் செஞ்ச விபரீதத்தால் சோகத்தில் முடிந்த திருமணம்..!
- தாலி கட்டும்போது ஏற்பட்ட பவர் கட்.. "அய்யய்யோ தாலிய மாத்தி கட்டிட்டீங்க".. பதறிய சொந்தங்கள்.. ஒரே நொடியில் மாறிப்போன வாழக்கை..!
- முதலில் Food Poisoning.. அப்புறமா நெஞ்சு வலி.. கல்யாணம் ஆன ஒரு மாசத்துல புருஷனுக்கு வந்த பிரச்சனை.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி
- "மாப்பிள்ளை போட்ருந்த ட்ரெஸ் பிடிக்கல".. கல்யாண வீட்டுக்குள் பறந்த கற்கள்..கைகலப்பில் முடிந்த திருமணம்..!
- "காத்துவாக்குல 3 காதல்.." 15 வருஷம் லிவிங் டு கெதர்.. 6 குழந்தைங்க முன்னாடி நடந்த திருமணம்..
- ஆசிரியையை 2-வதாக திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.. யார் இவர்..? வெளியான தகவல்..!