கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளில் அலங்காரம்.. 135 வருஷம் பழமையான அம்மன் கோவிலில் நடைபெறும் வழிபாடு.. சிலிர்க்க வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் உள்ள பழமையான அம்மன் கோவில் ஒன்றில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளில் தரை மற்றும் சுவர்கள் அலங்காரம் செய்யும் நிகழ்வு காண்போரை திகைக்க செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையோரம் இருக்கும் பெனுகுண்டாநகரில் அமைந்திருக்கிறது பழைமையான வசாவி கன்யாகா பரமேஸ்வரி திருக்கோவில். 135 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் தசரா பண்டிகையை முன்னிட்டு கர்ப்பகிரகத்தில் உள்ள சுவர்கள் மற்றும் தரைகளை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த பிரம்மாண்ட அலங்காரம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

6 கிலோ தங்கம்

இந்த வசாவி கன்யாகா பரமேஸ்வரி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விசேஷ தினத்தில் அம்மனுக்கு 6 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 கிலோ மதிப்புடைய வெள்ளி ஆபரணங்கள் செலுத்தப்பபடுகிறது. இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய் ஆகும். மேலும், இந்த தினத்தில் கோவிலை ரூபாய் நோட்டுகளை அலங்கரிக்கும் வைபவமும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கோவிலின் பல இடங்களில் பணம் அடுக்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமன்றி வெளிமாநிலத்தை சேர்ந்த மக்களும் திரளாக வந்து செல்கின்றனர். இருப்பினும் இந்த பண அலங்காரம் முழுக்க மக்களிடம் பணம் பெற்று செய்யப்படுகிறது. தசரா முடிந்தவுடன் இந்த பணம் மக்களிடமே திரும்ப கொடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண அலங்காரம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி இந்த அலங்காரத்திற்கு பக்தர்கள் பணம் செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்றுக்கொள்கின்றனர்.

4.5 கோடி ரூபாய்

தசரா முடிந்ததும், இந்த பணம் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தசரா தினத்தில் இந்த கோவிலுக்கு பணம் மற்றும் நகைகள் கொடுத்து வாங்கினால் தொழில் மற்றும் மகிழ்ச்சி பெருகும் என்கிறார்கள் மக்கள். முதன்முதலில் 11 லட்ச ரூபாயில் துவங்கிய இந்த அலங்காரம் நாளடைவில் கோடிக்கணக்கான ரூபாய்களில் நடைபெற துவங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 4.5 கோடி ரூபாய் பணம் கோவிலில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் கொடுக்கும் பணத்தை வைக்க இடம் இல்லாமல், கோவிலின் உள்ளே இருக்கும் மரங்கள் மற்றும் மின்விசிறிகளில் கட்டி தொங்கவிடுகிறார்கள் அதிகாரிகள். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ANDHRA TEMPLE, CURRENCY, GOLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்