VIDEO : "ஆம்புலன்ஸ் கேட்டோம், கிடைக்கல" ... 'வேற வழியும் எங்களுக்கு தெரியல'... நோயாளிய 'ஸ்ட்ரெச்சர்'ல வெச்சுட்டு சாலையில் கொண்டு சென்ற அவலம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருப்பதி கர்னூலில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வேண்டி, கொரோனா அறிகுறிகளுடன் 65 வயது முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு வர வேண்டும் எனக்கூறி வெளியே அனுப்பியுள்ளனர். அது மட்டுமில்லாமல், அந்த நோயாளியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, அவரது உறவினர்களுடன் மருத்துவர்கள் வெளியே அனுப்பி வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் குறித்து கேட்ட போது அதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஸ்ட்ரெச்சரில் நோயாளியுடன் அவரது உறவினர்களும் எக்ஸ்ரே மையத்தை தேடி சாலையில் அலைந்து திரிந்துள்ளனர்.

சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இவர்கள் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ந்து போன பொது மக்கள், இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அறிகுறியுடன் வந்த நபரை இப்படியா அலைய வைப்பது என கூறி தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்