"என்ன தவம் செஞ்சுபுட்டோம், அண்ணன் தங்கை ஆயிப்புட்டோம்".. நிரம்பி ஓடிய ஆறு.. தங்கைக்காக பாகுபலி லெவலில் Risk எடுத்த அண்ணன்கள்!!..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேர்வு எழுதுவதற்காக தங்களுடைய சகோதரியை சகோதரர்கள் இருவர் தோளில் சுமந்து சென்று ஆற்றை கடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எதே.. ? 31 ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்துருக்கா".. சொல்லவே இல்ல.. ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்!!

ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் கலாவதி. இவர் அரசு பணித் தேர்வுகளுக்காக தயாராகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, சமீபத்தில் கூட தேர்வு ஒன்றை எழுத கலாவதி விண்ணப்பித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், ஆந்திராவில் மழை வெளுத்து வாங்கியதன் காரணமாக, குறிப்பிட்ட தேர்வு தினத்தன்று கலாவதி வசிக்கும் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், மழை காரணமாக சம்பாதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதுவதற்காக விசாகப்பட்டினம் வரை செல்ல வேண்டிய சூழ்நிலையும் கலாவதிக்கு இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. இனி என்ன செய்வதென்று தெரியாமல், கலாவதி தவித்த நிலையில், அவரது சகோதரர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

தங்களுடைய சகோதரி தேர்வுக்கு தயாராகி இருந்ததால், அவர் அதனை எழுதாமல் போய் விடக் கூடாது என முடிவு செய்த சகோதரர்கள், தங்களின் உயிரை கூட பொருட்டாக மதிக்காமல், சகோதரியை தங்கள் தோளிலேயே சுமந்து, பத்திரமாக நீரில் அழைத்து சென்று ஆற்றைக் கடக்க உதவி செய்தனர்.

இதன் பின்னர் தேர்வு மையத்திற்கு சென்ற கலாவதி, நல்ல முறையில் தேர்வு எழுதினார். தங்கை தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக உயிரை பயணம் வைத்து அனுப்பி வைத்த சகோதரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Also Read | ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??

ANDHRA PRADESH, SISTER, RIVER, BROTHERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்