‘நாமதான் நாட்டுக்கே முன் உதாரணமா இருக்கணும்’.. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க பசுமை வரி வசூல் செய்யும் முறையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டுவந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். அதில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, மருத்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டும் 1 லட்சம் டன் அளவில் ப்ளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குவதாக தெரிவித்தார். அதில் 30 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள் 70 சதவீத ப்ளாஸ்டிக் குப்பைகள் பொதுவெளியில் சுற்றுசூழலை மாசுபடுவத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சுற்றுச்சூழலையும், இயற்கையும் நாம் பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்திகளால் எப்படி வாழமுடியும்? நமது மாநிலம் நாட்டிற்கு முன் உதாரணமாக இருக்கவேண்டும்’ என ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களின் மூலம் உற்பத்தியாகும் ப்ளாஸ்டிக்கால் மாசு ஏற்படுவதை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பசுமை வரி வசூல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ANDHRAPRADESH, GREENTAX, PLASTIC, JAGANMOHANREDDY, YSJAGAN, CM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்