‘பண்டிகைக்கு சென்ற இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள பெஞ்சலகோனா பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீம், அசோக், அன்சர் மற்றும் மஸ்தான் ஆகிய 4 பேர் மொகரம் பண்டிகையை முன்னிட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் பெஞ்சலகோனா அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் பாலத்தின்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அப்துல் அஜீம், அசோக், அன்சர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மஸ்தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 4 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்ததே விபத்துக்கான காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ANDHRAPRADESH, NELLORE, TWOWHEELER, ACCIDENT, YOUNGSTERS, MUHARRAM, FESTIVAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்