"கல்யாணத்துல இவ்ளோ கண்டிஷனா??.." வியப்பை ஏற்படுத்தும் கிராமம்.. "அதுவும் தாலி கட்டுற நேரத்துல ஒரு ட்விஸ்ட் இருக்கே.."
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, ஒரு திருமண நிகழ்ச்சி என்றாலே, மணமக்களின் இரு வீட்டாரும் கலந்து கொண்டு, ஊர் மக்களை அழைத்து, அனைவரின் முன்னிலையிலும் வைத்து விமரிசையாக திருமணம் நிகழும்.
அதன் படி, ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு விதமான சடங்குகள் மற்றும் முறைகள் வேறுபட்டு இருக்கும்.
இந்நிலையில், ஒரு கிராமத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடைபெறும் திருமணம் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
திருமணத்துல நிறைய கண்டிஷன்..
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் அருகே அமைந்துள்ள நுவலரேவு என்னும் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் வாழும் மக்களின் முன்னோர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன், ஒடிஷாவில் இருந்து இப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது. அனைத்து இடங்களிலும் கிராமத் தலைவர் என ஒருவர் இருக்கும் நிலையில், இந்த மீனவ கிராமத்திற்கு மூன்று பேர் தலைவர் இடத்தில் இருக்கின்றனர்.
அங்கு நடக்கும் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இவர்கள் தான் தலைமை தாங்குவார்கள். அதே போல, கிராமத்திற்கான தீர்மானங்களையும் இவர்கள் தான் எடுப்பார்கள். இதே போல, இந்த கிராமத்தில் திருமணம் நிகழ்ச்சி தொடர்பான காரியங்களும் சில நிபந்தனை படி தான் நடைபெறும். அடிக்கடி தோன்றும் தினங்களில் ஒன்றும் இந்த ஊரில் திருமணம் நடைபெறாது.
ஒரே கிராமத்துல உள்ளவங்க தான்..
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட தேதி ஒன்றில் தான் இந்த கிராமத்தில் திருமணம் நடக்கும். இதனால், அந்த நாளில் ஏராளமான திருமணங்கள் அரங்கேறும். இப்படி திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண் மற்றும் மணமகள் ஆகிய இரண்டு பேரும், அதே கிராமத்தில் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். வேறு இடத்தில் இருந்து வரன் பார்த்து, நுவலரேவு கிராம மக்கள் திருமணம் நிச்சயிப்பதில்லை.
மேலும் திருமணத்தின் போது, மணமக்களின் வலது கைகள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். இந்த திருமணத்தின் போது, வரதட்சணை எதுவும் மாப்பிள்ளை வீட்டார் வாங்கக் கூடாது. பெண் வீட்டாரிடம் இருந்து உடைகள் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம் என்பது அங்குள்ள விதி.
விழா மாதிரி இருக்கும்..
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், ஒட்டுமொத்த கிராமமும் அந்த நாளில் விழா கோலம் பூண்டிருக்கும். அனைத்து வீடுகளிலும் மின் விளக்குகள் மற்றும் பந்தல்கள் என அலங்கரிக்கப்பட்ட, செம விமரிசையாக நடைபெறும். இவை அனைத்தையும் விட, தாலி கட்டும் போது, மணமகன் மணப்பெண்ணுக்கு கட்டிய பின்னர், மணமகளும் மாப்பிள்ளையின் கழுத்தில் தாலி ஒன்று கட்ட வேண்டும்.
முன்னோர்களின் திருமணம் தொடர்பான சடங்குகளை காலம் காலமாக பின்பற்றி வரும் நுவலரேவு கிராமம் பற்றி, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "காலையில் நடனம் ஆடிய கல்யாண பொண்ணு.." கட்டுன மஞ்சள் தாலி ஈரம் கூட காயல .. துக்கத்தில் ஆழ்த்திய சோகம்!
- ‘இந்த நேரத்துல அப்பா பக்கத்துல இல்லையே’.. தாலி கட்டிய கையோடு மணமகன் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- "ஒரு பொண்ணுக்கு 3 முறை கல்யாணமா.?".. இந்த கிராமத்தில் தொடரும் வியக்க வைக்கும் கலாச்சாரம்..!
- கல்யாணம் ஆகி 7 நாள் ஆகியும்.. புருஷன நெருங்க விடாத புதுப்பெண்.. பையனுக்கு காத்திருந்த செம 'ட்விஸ்ட்'..
- தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்.. நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்!
- "மேடை, தாலி எல்லாம் ரெடி.." மேடையில மாப்பிள்ளை கோலத்த பாத்துட்டு 'நோ' சொன்ன மணப்பெண்.. "கல்யாண நாள்'லயும் இப்படியா??
- சாப்பாட்டு பந்தி Open பண்ணதும் உறவினர்கள் செய்த காரியம்.. கல்யாண வீட்ல நடந்த ருசிகரம்.. வைரலாகும் வீடியோ..!
- புயலால் கொந்தளிச்ச கடல்.. கொஞ்ச நேரத்துல கரையொதுங்கிய தங்க நிற தேர்.. ஆந்திராவில் பரபரப்பு..வைரல் வீடியோ..!
- கல்யாண வீட்டுல கேட்ட பயங்கர சத்தம்.. மணப்பெண்ணின் நண்பர் செஞ்ச விபரீதத்தால் சோகத்தில் முடிந்த திருமணம்..!
- முதலில் Food Poisoning.. அப்புறமா நெஞ்சு வலி.. கல்யாணம் ஆன ஒரு மாசத்துல புருஷனுக்கு வந்த பிரச்சனை.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி