இது ஒண்ணும் சாதாரண மீன் கிடையாது...! இந்த மீனோட வயித்துக்குள்ள ஒரு விஷயம் இருக்கு...' - இதோட 'விலைய' கேட்டப்போ தான் பயங்கர ஷாக்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன் ஒன்று ரூ. 2.40 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோதாவரி ஆற்றில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது மீனவர் ஒருவர் வலையில் மிக பெரிய அளவிலான மீன் சிக்கியது.

பிடிபட்ட மீனை பார்த்த போது அது 'பிச்' என்ற அரியவகையை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. அதோடு கரைக்கு கொண்டு வந்த அந்த மீனை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்துள்ளனர்.

மேலும் அது அரிய வகை மீன் என்பதால் அதை வாங்க பலர் போட்டிபோட்டுள்ளனர். பல பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த மீன் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.

ஏலத்தின் கடைசியில் அதேப்பகுதியை சேர்ந்த தரகொண்டா என்ற மீன் வியாபாரி, ரூ. 2.40 லட்சத்திற்கு அரிய வகை மீனை ஏலம் எடுத்துள்ளார்.

இந்த மீனின் வயிற்றுப்பகுதியில் உள்ள திரவம் மருந்தாக பயன்படுத்துவதால் இந்த மீனுக்கு மதிப்பு அதிகம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்