'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் நான்கரை வயது மகளை கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரசாந்த் நகரை சேர்ந்த கணேஷ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தபோது திவ்யா என்பவரை காதலித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், அவர்களுக்கு  நான்கரை வயதில் கார்த்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திவ்யாவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அவர் சில ஆண்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியதால் அதுகுறித்து அறிந்த கணேஷ் பல முறை அவரைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒருமுறை, திவ்யா தன் வீட்டிலேயே நகை திருட முயன்றதை அவருடைய தாய் ராஜலட்சுமியே பார்த்து  திவ்யாவை கண்டித்துள்ளார். ஆனால் திவ்யாவோ அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து தாயையே கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவியிடையே பிரச்சனை அதிகரிக்க, கணேஷ் மனைவியிடம் மற்ற ஆண்களுடன் உள்ள பழக்கத்தை துண்டிக்குமாறு கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த திவ்யா இதுபோல கூறினால் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக போலீசில் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதைக் கேட்டு  அதிர்ந்துபோன கணேஷ் செய்வதறியாது மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் கணேஷ் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதில் தனது மனைவியின் நடத்தை சரி இல்லை எனவும், எவ்வளவு கூறியும் கேட்காததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இப்படிபட்ட பெண்ணுடன் தனது மகளை வாழ வைத்தால் அவருடைய வாழ்க்கையும் சீரழிந்துவிடும் எனக் கூறி அவரை கொலை செய்யப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். பின்னர் வீடியோவில் கூறியது போலவே, கணேஷ் அவருடைய நான்கரை வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்