செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில் அதிவேக ரயிலாக வலம் வருகிறது. அப்படி இருக்கையில், பலரும் இந்த ரயிலை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!
Advertising
>
Advertising

Also Read | ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்.. இந்தியாவில் நடைபெறும் இறுதிச்சடங்கு.. யார் இந்த முக்காராம் ஜா பகதூர்?

அது மட்டுமல்லாமல் நிறைய பேர் புகைப்படம் எடுக்கவும் செய்கின்றனர். இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் புகைப்படம் எடுக்க முயன்ற நபர் குறித்த செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவர ரயில் நிலையத்தில் உள்ள வந்தே பாரத் ரயிலில் நபர் ஒருவர் ஏறி உள்ளதாக தெரிகிறது.

அந்த நபர் ரயிலில் பயணிக்க ஏறவில்லை என்றும் சில செல்ஃபி புகைப்படங்களை ரயிலில் எடுத்துக் கொள்வதற்காக ஏறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ரயிலை சுற்றி பார்த்துவிட்டு சில புகைப்படங்களையும் எடுத்துள்ளார் அந்த நபர். இதனிடையே, ரயில் கதவு தானாக மூடி புறப்படவும் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. செல்ஃபி எடுக்க ரயில் ஏறிய நபர், கதவு மூடிக்கொண்டதும் பதறிப் போய் திறக்கவும் முயன்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் அவரால் அது முடியாமல் போனது.

இதனையடுத்து நடந்த விவரங்கள் அனைத்தையும் அந்த நபர் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயிலில் இருக்கும் கதவுகள் தானியங்கி கதவுகள் என்றும் அவற்றை நாமாக திறக்க இயலாது என்றும் ரயில் நிலையம் வரும் போது தாமாகவே திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடிக்கொள்ளும் என்றும் டிக்கெட் பரிசோதகர் விளக்கியுள்ளார்.

இதை கேட்டு இன்னும் அதிர்ந்து போன அந்த நபர், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளார். இறுதியில், சுமார் 160 கிலோ மீட்டர் பயணம் செய்து விஜயவாடாவில் வந்தே பாரத் ரயில் நின்றதாக தகவல்கள் கூறுகின்றது. டிக்கெட் எடுக்காமல் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் ஏறிய அந்த நபர் சுமார் 160 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யவும் நேர்ந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் அந்த நபருக்கு அபராதம் மற்றும் தகுந்த அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதேபோல பார்வையாளர்கள் மற்றும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் ரயிலில் ஏற வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "விடிஞ்சா கல்யாணம்".. பல கனவுகளை மனசுல சுமந்துட்டு சிரிச்ச முகத்தோட நின்ன பொண்ணு.. திடீர்ன்னு நடந்த சோகம்!!

ANDHRA PRADESH, MAN, VANDE BHARAT EXPRESS, TRAVEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்