"கல்யாணம் பண்ணிக்குறியா இல்லியா??.." நைசாக நழுவ பார்த்த காதலன்.. கட்டையுடன் களத்தில் இறங்கிய காதலி
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திரா : காதலித்து ஏமாற்ற பார்த்த காதலனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க, கோபத்தில் கட்டையுடன் களமிறங்கிய காதலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்திலுள்ள சின்னத்தெக்கூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரை, லாவண்யா காதலித்து வந்துள்ளார்.
இருவரது காதலும் நல்லபடி சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென லாவண்யாவுடன் பேசுவதை, ஸ்ரீனிவாசன் தவிர்த்து வந்துள்ளார்.
காதலன் மீது சந்தேகம்
இதன் பெயரில், தன்னுடைய காதலன் ஸ்ரீனிவாசன் மீது லாவண்யாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காதலனின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கவே, லாவண்யாவின் சந்தேகமும் வலுத்துள்ளது. மேலும், காதலியை திருமணம் செய்து கொள்ளவும் ஸ்ரீனிவாசன் மறுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
காதலி எடுத்த முடிவு
காதல் என்ற பெயரில், தன்னை ஏமாற்றுவதை தெரிந்து கொண்ட லாவண்யா, காதலனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார். அதன் பெயரில், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தனது காதலன் செயல் குறித்து தெரிவித்த லாவண்யா, தனது கிராமத்திலுள்ள கோவில் ஒன்றிற்கு அருகே காதலனை வர வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
கட்டையுடன் இறங்கிய லாவண்யா
தொடர்ந்து, அங்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, காதலன் ஸ்ரீனிவாசனையும் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் மறுக்கவே, லாவண்யா மனமுடைந்து போயுள்ளார். பின்னர், ஆத்திரத்துடன் இருந்த லாவண்யா, அங்கு கிடந்த பெரிய கட்டை ஒன்றை எடுத்து, காதலனை துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்துள்ளார்.
வீடியோ வைரல்
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், தன்னுடைய காதலனை லாவண்யா கட்டையால் தாக்கிய நிலையில், அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் ஒன்றாக கூடி, காதலியை திருமண செய்து கொள்ளவும் ஸ்ரீனிவாசனிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பணத்த பார்த்து நான் லவ் பண்ணல.. எனக்கு ஏன் அவர பிடிக்கும்னா.. 50 வயது எலான் மஸ்க்-ஐ காதலிக்கும் 27 வயது நடிகை
- பேஸ்புக் மூலம் காதல்.. "பல பிரச்சன தாண்டி கல்யாணம் பண்ணியும்.. சேர்ந்து வாழுறதுல இவ்ளோ பெரிய சிக்கலா??"
- மனைவியும் பிரிஞ்சு போய்ட்டா.. இப்போ காதலியும் இல்ல.. வீடியோ காலில் பேசிய படி. இளைஞர் எடுத்த முடிவு
- கள்ளக்காதல் உறவு வைத்து இருந்ததற்காக பணி நீக்கம் செய்ய முடியாது.. குஜராத் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- முதன்முதலாக மனைவியிடம் காதலை சொன்ன இடத்திற்கு.. 27 வருஷம் கழித்து போனபோது.. அதே இடத்தில் வைத்து நடந்த விவரீதம்
- என் புருஷன முடிச்சிடலாம்.. மனைவியின் செல்போனில் சிக்கிய ஆதாரம்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்த உண்மை
- திபுதிபுன்னு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து.. லேடி டாக்டரின் அருகே சென்ற இளைஞர்.. அங்கு நடந்த ட்விஸ்ட்..!
- ‘என் புருஷன் குடிச்சு இறந்துட்டாரு’.. எல்லாரையும் நம்ப வைத்த மனைவி.. காதலன் சிக்கியதும் க்ளைமாக்ஸில் பரபரப்பு ட்விஸ்ட்..!
- 'வானத்து நிலவு சின்னதடி'.. காதலியுடன் ரொனால்டோ துபாயில் ரொமான்ஸ்.. மிரள வைத்த ஒரு நாள் செலவு
- VIDEO: வேலை முடிச்சிட்டு வந்த ‘IT’ பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. சிக்கிய அக்கா கணவர்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!