வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு பரிமாறிய மாமியார்.. மிரண்டு போன மாப்பிள்ளை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் கோதாவரியில் திருமணம் ஆகவுள்ள தனது பேத்திக்கும் வருங்கால கணவருக்கும் 365 வகையான உணவு வகைகளை சமைத்து திக்குமுக்காட வைத்த தாத்தா பாட்டிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

Advertising
>
Advertising

திருமணம் என்றாலே உணவுக்கு பஞ்சம் இருக்காது. திருமணம் ஆன கையோடு பெண் வீட்டிற்கு செல்லும் மாப்பிள்ளைக்கு விதவிதமான உணவை சமைத்து உபசரிப்பது வழக்கம். அவர் கேட்காமலேய அவர் இருக்கும் இடத்திற்கு ஸ்வீட், முறுக்கு, காரம் எல்லாம் வந்து சேரும். அதுபோன்று தான் ஆந்திர மாநிலம் கோதாவரியில் ஒரும் சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவி -கோவிந்த் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணமாக உள்ள தனது பேத்தி மற்றும் அவரின் வருங்கால கணவருக்காக சங்கராந்தியை முன்னிட்டு தாத்தா -பாட்டி இருவரும் சேர்ந்து தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர். இந்த உணவு உபசரிப்பு ஆந்திராவையே அதகளப்படுத்தியுள்ளது.

முதல்வர் ஐயா.. எங்கள பிளஸ் 2 எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்க.. சிரித்துக் கொண்டே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்

 

சங்கராந்தியையொட்டி  குந்தவியின் தாத்தா கோவிந்த், பாட்டி நாகமணி ஆகியோர் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணாவிற்கு விருந்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யும் பணி நடந்தது. இதில் பெண்ணின் பெற்றோரும் கலந்துகொண்டதால் மிகப் பிரம்மாண்டமான விருந்தாக மாறிவிட்டது. இந்நிகழ்ச்சிக்காக 30 வகையான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள் மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டன. 

இதில் 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பரிமாறினர். இதனைக் கண்டு திருமண வாழ்க்கையை தொடங்க உள்ள புதுமண தம்பதியினர் திக்கு முக்காடினார்.  இது குறித்து பெண் வீட்டார் கூறுகையில், 'வருங்கால மருமகன் மீது எங்களது அன்பைக் காட்ட, ஒரு வருடத்தில் 365 கணக்கிட்டு அதற்கேற்ப 365 வகையான உணவுகள் ஏற்பாடு செய்தோம்' என தெரிவித்தனர்.

VIDEO: பாதி வழியில் டிரைவருக்கு வலிப்பு.. ‘பயப்படாதீங்க பஸ்ஸை நான் ஓட்றேன்’.. கெத்து காட்டிய ‘சிங்கப்பெண்’!

 

தடபுடலான 365 வகையான உணவுகள், தாத்தா, பாட்டி திருமண ஜோடிகளுக்கு வழங்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே ஆந்திராவைச் சேர்ந்த மக்கள் தங்கள் அன்பான விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ANDHRA FAMILY, SON IN LAW, 365 DIFFERENT TYPES OF FOOD, ANDHRA PRADESH, GROOM, 365 வகையான உணவு, திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்