‘தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி’.. ‘திரும்பி பார்க்க வைத்த திட்டங்கள்’.. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு ‘தாய்மடி’ என்ற புதிய திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாய்க்கும் ஆண்டுக்கு 15,000 வழங்கும் ‘தாய் மடி’ (Amma Vodi) என்ற திட்டத்தை இன்று (09.01.2019) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் கொடுத்து கவுரவிக்கும் விதமாக ‘தாய் மடி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக அரசு 6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க மூன்று புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 45 ஆயிரம் அரசு பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தரப்படும். முதல்கட்டமாக 15,715 பள்ளிகள் புனரமைக்கப்பட உள்ளது. இதில் கழிவறை, சுத்தமான குடிநீர், நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுச்சுவர், தரமான கட்டிடம் , பெயிண்டிங் ஆகிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றி அமைக்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் அதே நாளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. அதில் 3 செட் சீருடை, புத்தகம், ஷூ, பெல்ட், பை ஆகியவை இருக்கும்.
மதிய உணவில் தினமும் ஒரே சாப்பாடு வழங்கினால் அது பிள்ளைகளுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு மெனு வழங்கப்பட உள்ளது. அதில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பருப்பு சாதம், புளியோதரை சாதம், வெஜிடபிள் சாதம், கிச்சிடி, கீரை சாதம், சாம்பார் சாதம், இனிப்பு, வேக வைத்த முட்டை மற்றும் கடலை மிட்டாய் ஆகியவை வழங்கப்பட உள்ளது. சனிக்கிழமை சாப்பாடு, சாம்பார், கூட்டு ஆகியவை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். சங்கராந்தி விடுமுறைக்கு பிறகு பள்ளிகளில் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘3 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஆண் வாரிசு இல்லை’.. பல நாள் வருத்தம்.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!
- அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து..! 25 பேர் படுகாயம், 2 பேர் சம்பவ இடத்திலே பலி..!
- 42 வருஷ 'அனுபவத்துல' சொல்றேன்... அதெல்லாம் 'வேண்டாம்' ஜெகன்... ஆந்திர முதல்வருக்கு அட்வைஸ்!
- சொன்னதை செய்த ‘ஜெகன்’... நிறைவேறியது 'திஷா' சட்டம்... பெண் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!
- 'வெங்காயம் வாங்க 2 மணி நேரம்!'.. '3 கி.மீ நீள வரிசையில் நின்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்!
- என்னாது வெங்காயம் 'இவ்ளோ' கம்மி விலைக்கு தர்றாங்களா? முண்டியடித்து அலைமோதிய கூட்டம்! வீடியோ!
- ‘ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி’... ‘அறுவை சிகிச்சைக்குப் பின்பும் நிதி உதவி’!
- திருமணமான மறுநாள் ‘சுருண்டு விழுந்த புதுப்பெண்’.. கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’.. ‘நிலைகுலைந்துபோன’ குடும்பத்தினர்..
- 'இனி இதுக்கெல்லாம் கூப்டாம இருந்து பாருங்க!'.. 'அடி, உதைதான் விழும்!'.. மிரட்டிய சபாநாயகர்.. அரண்டுபோன அதிகாரிகள்!
- ‘டிக்டாக்கில்’ பிரபலமான 7 வயது சிறுமியை.. ‘2000 ரூபாய்க்காக’ சித்தி செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..