ஆந்திராவில் அதிர்ச்சி.! கூட்ட நெரிசலில் மக்கள் பலி.. ரூ. 10 லட்சம் நிதி அறிவித்து சந்திரபாபு நாயுடு இரங்கல்‌

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதே வேளையில், ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Advertising
>
Advertising

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்த இரண்டு தேர்தல்களையும் கருத்தில் கொண்டு, ஆளுங் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளை தற்போதே தொடங்கி அதில் மும்முரமாகவும் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி, பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துக்கூரில் நடந்த பொது கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, அங்கே கூடி இருந்தவர்கள் மத்தியில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளு முள்ளும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், சுமார் 7 பேர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இது தவிர, சற்று ஆபத்தான நிலையிலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். அதே போல, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களையும் நேரடியாக மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதலும் கூறி உள்ளார் சந்திரபாபு நாயுடு.

அரசியல் பொது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ANDHRA PRADESH, CHANDRABABU NAIDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்