பழைய வீட்டை இடிக்கும்போது கிடைச்ச மர்ம லாக்கர்.. விஷயம் கேள்விப்பட்டு திரண்ட பொதுமக்கள்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் பழைய வீடு ஒன்றை இடிக்கும்போது லாக்கர் ஒன்று கிடைத்திருக்கிறது. இதனை திறக்க முயற்சிகள் எடுத்த நிலையில் உள்ளே இருந்த பொருட்களை கண்டு பொதுமக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

பொதுவாக உலகம் முழுவதிலும் புதையல் குறித்த ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து போன பொருட்களாக இருந்தாலும் சரி, தங்க, வைர சுரங்கங்களாக இருந்தாலும் சரி மக்கள் அதனை தெரிந்துகொள்ளவும், அவற்றை கைப்பற்றவும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இன்று நேற்றல்ல வரலாறு முழுவதும் இப்படியான புதையலை தேடி பலரும் பயணித்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடுவதில்லை.

Images are subject to © copyright to their respective owners.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவனகோன்டா மண்டலத்தில் இருக்கிறது கரிவேமுலா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு ஒன்றை கட்ட முயற்சித்திருக்கிறார். இதற்காக பழைய வீட்டை இடிக்க நினைத்த நரசிம்மலு ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்திருக்கிறார். பழைய வீட்டின் சுவரை இடிக்கும்போது அதற்குள் பழமையான இரும்பு லாக்கர் ஒன்று வெளிவந்திருக்கிறது. இதனால் அங்கு பணிசெய்துகொண்டிருந்த அனைவரும் ஆச்சர்யமடைந்திருக்கின்றனர்.

கொஞ்ச நேரத்தில் லாக்கர் குறித்து ஊர் முழுக்க தகவல் பரவியிருக்கிறது. இதனால் திரண்டு வந்த பொதுமக்கள் லாக்கரை திறக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆனாலும், பலன் அளிக்கவில்லை. லாக்கரில் மெட்ராஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்திருக்கிறது. மேலும், லட்சுமி தேவியின் படமும் அதில் இருந்திருக்கிறது. இரண்டு பூட்டுகளுடன் இருந்த லாக்கரை உடைக்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே வருவாய் துறையினருக்கு இதுபற்றி தகவல் கிடைக்கவே, அவர்களும் அங்கே விரைந்து வந்திருக்கின்றனர். லாக்கரின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய பொதுமக்கள் அங்கே மென்மேலும் திரண்டிருக்கின்றனர். இதற்கு மத்தியில் லாக்கர் உடைக்கப்பட்டதாகவும் அதனுள் பழைய பேப்பர்கள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ANDHRA, LOCKER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்