பாரம்பரிய முறையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்.. களைகட்டிய அம்பானி வீடு.. Pics.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது.
Also Read | கையிலே ஆகாசம்.. முதன்முதலில் மகள் ஓட்டிய விமானத்தில் பயணித்த அப்பா.. .. நெகிழ்ச்சி வீடியோ..!
முகேஷ் அம்பானியுடைய ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகளுக்கு அளிக்கப்பட்டன. இந்நிலையில், ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட். மும்பையில் பள்ளிக் கல்வியை முடித்த ராதிகா, அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். அதன்பிறகு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் பின்னர் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். இந்நிலையில், தற்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார் ராதிகா மெர்ச்சண்ட்.
இந்நிலையில் மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் குஜராத் வழக்கப்படி திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு முன் நடைபெறும் இந்த விழாவை குஜராத்தில் கோல் தானா விழா என்கிறார்கள். கோல் என்றால் வெல்லம், தானா என்றால் கொத்தமல்லி விதைகள் என்று அர்த்தமாம். இந்த பொருட்கள் நிகழ்வு நடைபெறும் மணமகன் இடத்தில் விநியோகிக்கப்படுகின்றன. மணமகளின் குடும்பத்தினர் மணமகன் வீட்டிற்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளுடன் வருவார்கள். பின்னர் தம்பதியினர் மோதிரங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
இன்று மாலை அம்பானி குடும்பத்தினர், ஆனந்தின் சகோதரி இஷா அம்பானி தலைமையில் மெர்ச்சண்ட் இல்லத்திற்குச் சென்று, அவர்களையும் ராதிகாவையும் விழாவிற்கு அழைத்தனர். அதன்பின்னர் அம்பானி குடும்பத்தினர் ஆர்த்தியுடன் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றனர்.
இதனையடுத்து கணேஷ் பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து துவங்கிய நிச்சயதார்த்த விழாவில் திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் இரு குடும்பத்தினரும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். இப்படி பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற வைபவத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக, ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் குடும்பத்தினர் வழிபாடு நடத்தினர். இதனையடுத்து பாரம்பரிய வழக்கப்படி சடங்குகள் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்