கண்டிப்பா 'ஹெல்ப்' பண்ணியே ஆகணும்... 'விவசாயிகளின்' வாட்டம் போக்க 'களமிறங்கிய' தொழிலதிபர்... குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகை கொரோனா ஆட்டுவிக்கும் இந்த சூழலில் பல்வேறு நாடுகளிலும் மனிதநேயம் தலை தூக்கியுள்ளது. உணவு, காய்கறிகள், மருந்துகள், தங்குமிடம் என தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு வழங்கிட ஏராளமான பேர் முன்வந்துள்ளனர். அந்த வகையில் வாழை தொழிலாளிகளின் வாட்டம் போக்கிட தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா முன்வந்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் பத்மா ராம்நாத் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். அதில் உங்கள் கேண்டீன்களில் வாழை இலைகளை தட்டுகளாக பயன்படுத்தினால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். அதை உடனடியாக எங்கள் கேண்டீன்களில் செயல்படுத்தி விட்டோம்,'' என தெரிவித்து ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

அதில் தட்டின் மேலே வாழை இலையை வைத்து தொழிலாளர்கள் சாப்பிடுவது போல புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. இதைக்கண்ட நெட்டிசன்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்