மொத்த வாழ்க்கையும் இவ்வளவுதாங்க..ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச போட்டோ.. ரொம்ப சிம்பிளா சொல்லிட்டாரே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ள போட்டோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சத்தமா பாட்டு வைக்காதிங்க.. திருமண ஊர்வலத்தில் எழுந்த சிக்கல்.. கலவரமான கல்யாண வீடு..

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

யின் யாங் தத்துவம்

சீனாவில் தாவோயிசம் பரவிய காலத்தில் இந்த யின் யாங் தத்துவம் புகழ்பெற்றதாக கருதப்படுகிறது. அதாவது இரண்டு எதிர் எதிர் விஷயங்கள் இணையும்போது மட்டுமே முழுமையை தரும் என்பதே இந்த தத்துவம் உரைக்கும் சங்கதி. ஒரு வட்டம், அதில் இரு பிரிவுகள். ஒரு பகுதி கருப்பு (யின்), ஒரு பகுதி வெள்ளை (யாங்) . கருப்பு பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளி. வெள்ளை பகுதியில் ஒரு கருப்புப் புள்ளி. வெள்ளையும் கருப்பும் சுழல்வதைப் போன்ற ஒரு அமைப்பு. அதுதான் யின் யாங் சின்னம்.

இதில் கருப்பு தீமையையும், வெள்ளை நன்மையையும் குறிக்கிறது. ஆக, இந்த தத்துவத்தின் அடிப்படையில் நன்மையும், தீமையும் இணைந்து இருப்பதே வாழ்க்கை ஆகிறது. தொழிலதிபரும் இந்திய பணக்காரர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா இந்த புகைப்படத்தை தான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

இந்த பதிவில் ஆனந்த் மஹிந்திரா,"வாரத்தில் பாதி கழிந்திருக்கும் இந்த நிலையில் இந்த "பாதிகள்" குறித்த கதையை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுகள் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெறும். அந்த வகையில் வாழ்க்கை குறித்த அவருடைய இந்த பதிவும் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

ANAND MAHINDRA, YIN YANG THEORY, YIN YANG THEORY PICTURE, TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்