"ஸ்கூலை கட் அடிச்சிட்டு இதைத்தான் வேடிக்கை பார்ப்போம்".. கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறுவயது நினைவுகளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா கோகுலாஷ்டமியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடைய சிறுவயது நினைவுகளையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | 66 மில்லியன் வருஷ மர்மம்.. கடலுக்கடியே நடந்த ஆராய்ச்சி.. இப்படி ஒன்னு நடந்திருக்கும்னு யாரும் யோசிக்க கூட இல்லை..!

கோகுலாஷ்டமி

பகவான் கிருஷ்ணன் அவதரித்த நாளாக கோகுலாஷ்டமி கருதப்படுகிறது. இதனை ஜென்மாஷ்டமி என்றும் அழைக்கிறார்கள் மக்கள். தங்களது வீடுகளில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணன் போல அலங்கரித்து, அவர்களது பாத சுவடுகளை வாசலில் இருந்து பூஜை அறை வரையில் அரசி மாவு கொண்டு பதிக்கின்றனர் மக்கள். இதனை கிருஷ்ணனின் வருகையாக மக்கள் கருதுகின்றனர். மேலும், வீட்டில் சிறப்பு பூஜைகளையும் நடத்தி மக்கள் இந்த கோகுலாஷ்டமியை கொண்டாடுகின்றனர்.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வேடிக்கை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிறுவயது நினைவை பகிர்ந்திருக்கிறார். அதில் மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி உயரத்தில் தொங்கும் பானையை எடுக்கும் நிகழ்வை (தாஹி ஹண்டிஸ்) பார்த்த ஞாபகங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பதிவில்,"சார், தாஹி ஹண்டிஸ் நிகழ்வால் சாலை எங்கும் ஒரே கூட்டம். எங்களுடைய பேருந்து நகரவே இல்லை - இதுதான் ஜென்மாஷ்டமி நாளில் பள்ளிகளை கட் அடித்துவிட்டு கூட்டமாக நின்று இந்த மனித பிரமிடுகளை பார்க்க மும்பை பள்ளிக் குழந்தைகள் சொல்லும் வாடிக்கையான சாக்கு. எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் குறும்புக்கார கிருஷ்ணரைக் கொண்டாடினோம். அனைவர்க்கும் ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | சூடுபிடிக்கும் பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. மனைவியுடன் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரிஷி சுனக்.. வைரல் புகைப்படம்..!

ANAND MAHINDRA, ANAND MAHINDRA WISHES JANMASHTAMI, DAHI HANDI EVENT, ஆனந்த் மஹிந்திரா, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்