'லாபம்' அப்படிங்குறது 'கெட்ட வார்த்தை' இல்ல...! மத்திய அரசின் 'அந்த' அறிவிப்பை பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்திரா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு தடுப்பூசி குறித்து வெளியிட்ட அறிவிப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை ஒழிந்தப்பாடில்லை. மேலும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் பரிசோதனை கட்டத்தில் குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட நபர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது

அதோடு நேற்று இந்தியாவின் முக்கிய மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு தடுப்பூசி உற்பத்தி குறித்த புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்தியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகளில் 50%த்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கு அளிக்கலாம்' என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பிரதமரின் இந்த அறிவிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட குறிப்பில், 'பாரத பிரதமர் இன்று வெளியிட்ட புதிய கொள்கையின்படி, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை திறந்த சந்தையில் முன்பே அறிவிக்கப்பட்ட விலையில் விற்க அனுமதிக்கிறது.

உற்பத்தி தொழிலில் லாபம் என்பது கெட்ட சொல் அல்ல. இது அதிக உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஊக்கமாக அமையும்' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்