"பாக்க பாக்க பொறாமையா இருக்கு".. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச புகைப்படம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தொழிலதிபரும் பணக்காரர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திராவின் சமீபத்திய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "ஒருவேளை டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியலைனா என்கிட்ட பிளான் B இருக்கு".. எலான் மஸ்கின் ஸ்மார்ட் மூவ்.. ஆட்டம் சூடு பிடிக்குது..!

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

விலங்குகளின் மீது பிரியம்

இந்தியாவில் பிறந்த ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய கல்லூரி படிப்பு மற்றும் மேலாண்மை கல்வியை புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார். சிறுவயது முதலே விலங்குகளிடம் ஆனந்த் மஹிந்திராவிற்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது.

நேற்று ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,"நான் எனது குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை நாகர்ஹோலே சரணாலயத்திற்கு அருகில் விடுமுறையில் கழித்திருக்கிறேன். பலமுறை கார்பெட்டுக்குச் (Corbett) சென்றிருக்கிறேன். இருப்பினும் புலியை அதன் வாழ்விடத்தில் பார்த்ததில்லை. என் சகோதரி இந்த அற்புதமான படங்களை பாந்தவ்கர் தேசிய பூங்காவிலிருந்து எனக்கு அனுப்பியிருக்கிறார்.எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயற்கை ஆர்வலரான ஆஷிஷ் டிர்கி எடுத்த புலியின் புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

பாந்தவ்கர் தேசிய பூங்கா

மத்திய பிரதேசம் - விந்திய மலைகளுக்கு இடையே உள்ளது பாந்தவ்கர் தேசிய பூங்கா. சுமார் 105 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்ட தேசிய பூங்காவில் வங்க புலிகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், தன்னுடைய சகோதரி அனுப்பிய புகைப்படங்கள் பொறாமைப்பட வைத்திருப்பதாக ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | 10 வருஷமா பூட்டுன வீட்டுக்குள்ள தவித்த பாட்டி.. பசி தாங்க முடியாம மண்ணை தின்ற சோகம்..!

ANAND MAHINDRA, ANAND MAHINDRA TWEET, BUSINESSMAN ANAND MAHINDRA, ஆனந்த் மஹிந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்