"ஒரு பிரச்சனையில தீர்வு கண்டுபிடிக்கணும்னா இது ரொம்ப முக்கியம்".. ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. வைரலாகும் பதிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | தமிழ் பாடல் பின்னணியில்.. பட்டையை கிளப்பிய நெல்லை சிறுவன்.. அசந்து போய் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா.. பின்னணி என்ன??

வாழ்க்கை குறித்து பன்னெடுங்காலமாக பல்வேறு நிபுணர்கள், தத்துவ ஞானிகள் பல கருத்துக்களை கூறியிருக்கின்றனர். ஆனாலும், வாழ்வில் நாம் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் சிக்கல்களை நாம் எதிர்கொள்வதையே சிலர் தங்களது பலமாக மாற்றிக் கொள்கிறார்கள் இதற்கு முக்கிய தகுதியாக பார்க்கப்படுவது சிக்கல்கள் குறித்த நமது பார்வையை மாற்றுவது. இதுபற்றி தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Mug

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தற்போது ஒரு Mug-ன் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்த Mug-ல் வேறுவிதமாக யோசிக்கவேண்டும் எனும் பொருள்படும்படி "Think Outside The Box" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இந்த கூற்றுக்கு உதாரணம் அளிப்பதுபோல கீழே ஒரு படமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"நான் இந்த Mug-ஐ வாங்கப்போகிறேன். உங்களுடைய சூழலை விட்டு வெளியே வந்து யோசிக்கும்போது பெரும்பாலான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவை இதுவரையில் 2,500 பேர் லைக் செய்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னதாக நேற்று, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. இதனை குறிப்பிட்டு இருவருக்கும் தங்கப்பதக்கம் அளிக்க வேண்டும் என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்தது நெட்டிசன்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "Late பண்ணதுக்கு மன்னிச்சுடுங்க.." நெட்டிசனின் கமெண்ட்டிற்கு ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதில்.. வியந்து போன நெட்டிசன்கள்

ANAND MAHINDRA, ANAND MAHINDRA TWEET, ஆனந்த் மஹிந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்