"எதுமே இன்னும் சரியா கிடைக்கல".. தஞ்சை கோவிலை எண்ணி ஆதங்கப்பட்ட ஆனந்த் மஹிந்திரா.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Advertising
>
Advertising

Also Read | "பாத்துட்டோம், Vintage ரெய்னா'வ பாத்துட்டோம்".. ஒரே ஒரு கேட்ச்.. "கிரிக்கெட் ரசிகர்கள் மொத்தமா ஆடி போய்ட்டாங்க!!"

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

அந்த வகையில், தற்போது சோழர்கள் குறித்து ஆனந்த் மஹிந்திரா ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சோழ மன்னர்கள் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள், வீரம், செழிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை அடங்கியதாக இருந்துள்ளது. மேலும், அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், அணைகள் கூட இன்றும் பலம் வாய்ந்து வரலாற்று புகழுடன் திகழ்கிறது. இதனிடையே, பிரபல டிசைனர் ஒருவர் தஞ்சை பெரிய கோவில் பற்றிய சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் சோழ சாம்ராஜ்யத்தின் சாதனைகள் குறித்தும் அந்த கட்டிட அறிவுத்திறமை குறித்தும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "உலக அளவில் நமது சரித்திரத்தை கொண்டு செல்ல மறந்து விட்டோம். சோழப் பேரரசு எவ்வளவு சாதனை படைத்தது, சக்தி வாய்ந்தது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியது என்பதை நாம் உண்மையில் உள் வாங்கவில்லை என நினைக்கிறேன். உலக அளவில் தஞ்சை கோயிலுக்கு கிடைக்க வேண்டிய எந்த பாராட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை " என தனது கருத்தை ஆதங்கத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில் தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. முன்னதாக பிரிட்டிஷ் பேரரசு குறித்து பள்ளியில் படித்ததால், சோழப் பேரரசு பற்றி எதுவும் தெரியாமல் போனது என்றும் இது தொடர்பாக படித்தும், சினிமாவை பார்த்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆனந்த மஹிந்திரா விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "எல்லா பொண்ணுங்களும்"... கருக்கலைப்பு விஷயத்தில்.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு!!

ANAND MAHINDRA, ANAND MAHINDRA TWEET, CHOLA, CHOLA EMPIRE, THANJAI TEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்