"மிஸ்டர் மஸ்க்..இதான் எங்க ஊரு டெஸ்லா.. இதுக்கு எரிபொருள், கூகுள் Map கூட தேவையில்ல"..ஆனந்த் மஹிந்திராவின் தரமான செய்கை..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கை குறிப்பிட்டு இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிற்து.

Advertising
>
Advertising

Also Read | “அதுக்கான நேரம் வந்திருச்சு”.. IPL-ல் பட்டைய கிளப்பும் நடராஜன்.. முன்னாள் இந்திய கேப்டன் ஓபன் டாக்..!

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

டெஸ்லா

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இவருடைய டெஸ்லா நிறுவனம் உலக அளவில் அதிகமான எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்துவருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் போன்ற கரியமில வாயுக்களை வெளியிடும் எரிபொருளுக்கு மாற்றாக மின்னாற்றல் மூலமாக கார்களை இயக்குவதே எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்பதே மஸ்கின் நோக்கம்.

வைரல் டிவிட்

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்கை குறிப்பிட்டு," BACK to the Future. இதுதான் எங்களது நாட்டின் டெஸ்லா. இது இயங்க எரிபொருள் தேவையில்லை. கூகுள் மேப் கூட தேவையில்லை. முழுவதும் தானாக இயங்கக்கூடிய வாகனம். ஓய்வடுக்கலாம் அல்லது தூங்கலாம் ஆனால் நீங்கள் உங்களுடைய இலக்கை இதில் அடைந்துவிட முடியும்" எனப் பதிவிட்டு மாட்டுவண்டி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ELON MUSK, TESLA, ANAND MAHINDRA, ANAND MAHINDRA TAGS ELON MUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்