மனசு இருந்தா போதும்.. பொழச்சுக்கலாம்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

வழக்கமாக 'Monday motivation' என்ற ஹேஷ்டாக்கில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் உத்வேகம் அளிக்கக்கூடிய பதிவுகளை அல்லது வீடியோக்களை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வீடியோ

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருக்கும் இந்த வீடியோவில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் இறங்கினால் உடைகள் மற்றும் காலணிகள் மழைநீரில் நனைந்துவிடும் என அச்சப்படும் பயணிகளுக்கு ஒருவர் உதவுகிறார். சாலையின் ஒருபக்கத்தில் இருந்து டிராலி மூலமாக மக்களை அடுத்த பக்கத்திற்கு ஏற்றிச் செல்கிறார் அவர். இரண்டு பேர் அதில் ஏறியவுடன் அதனை நகர்த்திச் சென்று சாலையின் மறுமுனையில் நிறுத்துகிறார். இதற்கு அவர் பணம் பெற்றுக்கொள்வது போலத் தெரிகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா,"தொழில்முனைவு & தொழில். இது எல்லா இடங்களிலும் உள்ளது. தடுக்க முடியாதது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், அந்த மனிதரின் வித்தியாசமான சிந்தனையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

ANANDMAHINDRA, HELP, VIDEO, ஆனந்த் மஹிந்திரா, வீடியோ, உதவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்