"இவரை மாதிரி ஆளுங்க வெளிச்சத்துக்கு வராமலே போயிடுறாங்க".. ஆனந்த் மஹிந்திரா வேதனையுடன் ஷேர் செஞ்ச வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தலையில் இருகைகளாலும் சாக்கை சுமந்தபடி சைக்கிள் ஒட்டிச் செல்லும் நபர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து உள்ளார் இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா.

"இவரை மாதிரி ஆளுங்க வெளிச்சத்துக்கு வராமலே போயிடுறாங்க".. ஆனந்த் மஹிந்திரா வேதனையுடன் ஷேர் செஞ்ச வீடியோ..!
Advertising
>
Advertising

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கிவருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். இதன் காரணாமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Anand Mahindra shares video of man balancing bicycle

சைக்கிள் பயணம்

தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு மனிதர் தலையில் பெரிய சாக்கு மூட்டையுடன் சைக்கிளில் செல்கிறார். சைக்கிளின் கம்பிகளைக் கூட தொடாமல், சாக்குப் பையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வதில் அவர் கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு திருப்பத்திலும் சைக்கிளை தொடாமல் திறமையாக சைக்கிளை திருப்புகிறார் அந்த நபர். இது காண்போரை திகைக்க வைத்திருக்கிறது.

வைரல் வீடியோ

கைகளால் தொடாமலேயே திறமையாக சைக்கிளை ஓட்டும் நபரின் சாகச வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ஆனந்த் மஹிந்திரா இதுபோன்ற நபர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காமல் போவதாக வேதனை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா,"இந்த மனிதர் ஒரு மனித செக்வே. அவரது உடலில் gyroscope பொருத்தப்பட்டுள்ளது போல நம்பமுடியாத அளவுக்கு சமநிலையை மேற்கொள்கிறார். இவரைப் போன்ற திறமையான ஜிம்னாஸ்ட்கள்/விளையாட்டு வீரர்கள் போதிய வெளிச்சம் கிடைக்காமல் பயிற்சி பெறமுடியாத சூழ்நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் 8 லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்,  இந்த அசாத்திய மனிதரின் திறமையை ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய பிறகு இந்த வீடியோ இன்னும் வைரலாக பரவிவருகிறது.

 

ANANDMAHINDRA, VIRALVIDEO, BICYCLE, ஆனந்த்மஹிந்திரா, வைரல்வீடியோ, சைக்கிள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்