"Car'அ இப்டி கூட Use பண்ணலாம் போலயே!!".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ!!..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Advertising
>
Advertising

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தொடர்பான செய்தி, அவர் உட்பட நெட்டிசன்கள் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. ஆனந்த் மஹிந்திரா தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெரிய சைஸில் கார் ஒன்று இருப்பது போல அமைந்துள்ளது.

பார்க்க கார் போல தோன்றினாலும், அது மிகப் பெரிய கேட் ஒன்று தான், கார் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது பின்னர் தெரிய வருகிறது. அடிப்படையில் அந்த கார், கேட்டுடன் பொதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காரின் சக்கரங்கள், கேட்டின் ரோலர்கள் போலவும் செயல்படுகிறது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில், கேட்டின் மறுபக்கத்தில் இருந்து ஒரு நபர், கார் வடிவில் இருக்கும் கேட்டினை தள்ளிக் கொண்டு, கார் கதவை திறந்து அதிலிருந்து வெளியே வருகிறார்.

கார் ஒன்றின் பாகத்தினை கொண்டு, அப்படியே கேட்டுடன் சேர்த்து செய்துள்ள முற்றிலும் புதுமையான டிசைன், நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோவைக் கண்டு வியந்து போன ஆனந்த மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வினாடி வினா வடிவில், கேப்ஷன் ஒன்றையும் போட்டுள்ளார்.

அவரது கேப்ஷனில், "இந்த நபர், 1) ஒரு தீவிர கார் பிரியர்? 2) தன் வீட்டில் யாரும் நுழைவதை விரும்பாத ஒரு Introvert? 3) நகைச்சுவை உணர்வுடன் கூடிய புதுமையான நபர்? 4) மேலே உள்ள அனைத்தும்?" என நான்கு ஆப்ஷன்களை அந்த நபருக்கு ஆனந்த் மஹிந்திரா கொடுக்கவும் செய்துள்ளார்.

 

பார்ப்பதற்கு கார் போலவே இந்த கேட்டடினை காணும் பலரும், மிகவும் புதுமையான முயற்சி என பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ANAND MAHINDRA, CAR, INNOVATIVE, GATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்