VIDEO: கேஷ் 'கையில' வேண்டாம் ப்ரோ...! 'UPI QR கோட்' வழியா பணத்த சென்ட் பண்ணுங்க... - ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த 'வைரல்' வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்படும் பழக்கம் எந்த அளவு உயர்ந்துள்ளது என தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே உபயோகித்து வருகின்றனர். அதுவும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல் ஆன்லைன், யூ.பி.ஐ ஸ்கேன்னிங், ஜிபே, பே.டி.எம். என ஆப்கள் உபயோகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதோடு, பிரபல நிறுவனங்கள் முதல் நம் தெருவில் இருக்கும் மளிகைக்கடை வரை அனைத்து கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவில் ஆன்லைன் பேமன்ட் முறை எந்தளவு ஊடுருவி இருப்பதை பாருங்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் தன் மாட்டின் தலையில் UPI QR code-ஐ ஒட்டி அதன் மூலம் வீடு வீடாக சென்று பணத்தை வசூலிக்கிறார். அதோடு, அந்த ஸ்கேன்னரை பயன்படுத்தி ஒருவர் பூம்பூம் மாட்டுக்காரருக்குப் பணம் அனுப்புகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, "இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குப் பெரிய அளவில் மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா?!" எனவும் குறிப்பிடுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விற்பனை ஆப்கள் ஆஃபர்களை அள்ளி வீசிய நிலையில், இந்தியாவில் முன்பு இல்லாத அளவுக்கு ஆன்லைன் பேமன்ட்கள் அதிகரித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த 2016-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2020 அக்டோபர் மாதம் ரூ. 3.86 லட்சம் கோடி UPI மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது இரட்டிப்பாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ANAND MAHINDRA, VIDEO, BULL, UPI PAYMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்