360 டிகிரியில் எவெரெஸ்ட் சிகரம் .. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச அட்டகாசமான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா எவெரெஸ்ட் சிகரத்தின் 360 டிகிரி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சூப்பர்மேனா இருப்பாரோ.. 50 மணி நேரத்துல 350 கிமீ.. இணையத்தை தெறிக்கவிட்ட இளைஞர்..வைரல் வீடியோ..!
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
எவெரெஸ்ட் சிகரம்
உலகின் மிக உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் எவெரெஸ்ட் இமயமலை தொடரில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த பகுதிக்கு எப்போதும் சுற்றுலாவாசிகள் செல்ல விரும்புவதுண்டு. அடர் பனி சூழ்ந்த மலைகள் இந்த இடத்தை மேலும் அழகாக்குகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தொழிலதிபரும் பணக்காரர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்து உள்ளார். அதில்," எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட 360 டிகிரி காட்சி இது. சில நேரங்களில், நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் போது, நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பார்க்க எளிதாக இருக்கும். அப்போது இந்த ‘big picture’ ஐ பார்ப்பதும் எளிதாக தோன்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்
கமெண்ட்
ஆனந்த் மஹிந்திராவின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவ, இதுகுறித்து கமெண்ட்களும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த வீடியோவில் கமெண்ட் போட்டுள்ள ஒருவர்," அருமையான காட்சி. ஆனால், எவெரெஸ்ட் என்றால் பனி அடர்ந்த பகுதியாக இருக்கும் என நினைத்தேன். இந்த வீடியோவில் லேசான பனி அடுக்கு மட்டுமே தெரிகிறது. முன்பு இல்லாததை விட புவி வெப்பமயமாதல் விளைவு தான் இதற்கான காரணம்" என குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல பலரும் புவி வெப்பமயமாதல் குறித்து அந்த பதிவில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
யம்மாடி...உலகத்துலயே மிக உயரமான முருகன் சிலை கும்பாபிஷேகம்.. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீன் பிடிக்க இப்படி ஒரு ஐடியாவா?.. சிறுவனை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரல் வீடியோ..!
- "எனக்கும் ஒன்னு செஞ்சு குடுங்க"..மரவேலையில் திறமையை காட்டிய நபர்..ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்..!
- "இவரை கொஞ்சம் கண்டுபிடிச்சு தாங்கப்பா".. ஆனந்த் மஹிந்திராவை நெகிழ்ச்சியடைய வைத்த நபர்!
- இந்த டீ விலைமதிப்பு இல்லாதது.. ஆனந்த் மகிந்திரா போட்ட ட்வீட்.. ஃபேமஸ் ஆன இந்தியாவின் கடைசி கடை
- செக்யூரிட்டி செஞ்ச சின்ன வேலை.. 7 கோடி ஓவியம் அவுட்.. ஆனந்த் மகேந்திரா கொடுத்த பலே ஐடியா
- 'ஆனந்த் மகிந்திரா' வை அசரவைத்த ஆட்டோ டிரைவர்.. நேரில் அழைத்து நெகிழ்ந்து போன டிஜிபி..
- ஷோரூமில் விவசாயிக்கு நேர்ந்த துயரம்.. நேரடியாக இறங்கிய ஆனந்த் மஹிந்திரா.. அதிரடி ஆக்ஷன்
- Anand mahindra | பழைய வண்டிய வாங்கிட்டு belora வை தூக்கி கொடுத்த ஆனந்த் மகிந்திரா.. நெகிழ வைத்த பின்னணி
- நெகிழ்ந்து போய் நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் வீரர்.. பேச வார்த்தைகளின்றி உருகி போன ஆனந்த் மகிந்திரா
- 'போடா டேய்'.. தமிழில் ஆனந்த் மகேந்திரா போட்ட ட்வீட்.. பொங்கல் அதுமா.. தமிழர்களை இப்படி நெகிழ வச்சுட்டாருப்பா