மன உறுதியுடன் வேலை.. மாற்றுத்திறனாளியால் நெகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா.. பதிலுக்கு சொன்ன விஷயம் தான் சர்ப்ரைஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கை மற்றும் கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஒருவரின் வியக்க வைக்கும் மனா உறுதியால், நெகிழ்ந்து போன ஆனந்த் மஹிந்திரா, அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகம் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடியவர்.

தன் கண்ணில் படும் பல வித்தியாசமான விஷயங்களை பகிரும் ஆனந்த் மஹிந்திரா, தனது நிறுவனம் மூலம் பலருக்கு உதவியும் செய்து வருகிறார். உதாரணத்திற்கு சமீபத்தில், மகாராஷ்டிராவின் தேவராஷ்டிரா என்னும் பகுதியைச் சேர்ந்த தத்தாத்ர்ய லோஹர் என்பவர், பழைய உதிரி பாகங்கள் மூலம், ஜீப் ஒன்றை உருவாக்கியிருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

இது தொடர்பான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, வில்லேஜ் விஞ்ஞானியை ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியிருந்தார். மேலும், 'லோஹரின் வாகனம், விதிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால், அதனை சாலையில் இயக்குவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, அவரின் கண்டுபிடிப்பைப் பாராட்டி, மஹிந்திராவின் போலரோ கார் ஒன்றை வழங்குகிறேன். மேலும், அவரது கண்டுபிடிப்பான ஜீப், மஹிந்திராவின் ரிசர்ச் வேலியில் காட்சிக்கு வைக்கப்படும்' என வெகுமதியுடன் பாராட்டியிருந்தார்.

 

நெகிழ வைத்த நபர்

இந்நிலையில், தற்போது அதே போன்று நெகிழ வைக்கும் வீடியோ ஒன்றைத் தான் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், கை கால்களை இழந்த உடல் ஊனமுற்ற நபர் ஒருவர், தனக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை எப்படி ஓட்டி, குடும்பத்தினை காப்பாற்றி வருகிறார் என்பது பற்றி விளக்குகிறார்.

கடவுளின் அருள்

கை கால்கள் ஊனமற்று இருக்கும் நிலையில், மனஉறுதியுடன் வாகனம் ஓட்டி வரும் நபர், இரண்டு பேரிடம் பேசுகிறார். வண்டியை தான் ஸ்டார்ட் செய்வது பற்றியும், இயக்குவது பற்றியும் விளக்குகிறார். 'நான் ஐந்து வருடங்களாக இப்படி வண்டி ஓட்டி வருகிறேன். எனக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தந்தையும் உள்ளார். அவர்களுக்காக பணிபுரிந்து வருகிறேன். எல்லாம் கடவுளின் அருள்' என கூறிவிட்டு, வாகனத்தை இயக்கிச் செல்கிறார்.

 

வேலை கொடுக்க தயார்

இதனை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, 'எனது டைம்லைனில் இன்று கிடைத்த வீடியோ இது. எவ்வளவு பழமையான வீடியோ என்றோ, எங்கு நடந்தது என்பது பற்றியான விவரங்களோ எதுவும் தெரியவில்லை. ஆனால், இந்த மனிதரின் மனஉறுதியை கண்டு நான் வியப்படுகிறேன். தன்னிடம் உள்ளவற்றை குறையாக காணாமல், அதற்கு நன்றி உள்ளவராக உள்ளார்' என குறிப்பிட்டுள்ளார். மேலும், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்டில் பிசினஸ் அசோசியேட் ஆக்கிக் கொள்ளவும் பரிந்துரை செய்துள்ளார்.

 

இது தொடர்பான ட்வீட் மற்றும் அந்த மனிதரின் நெகிழ வைக்கும் வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

ANAND MAHINDRA, VIRAL VIDEO, CONFIDENCE, ஆனந்த் மஹிந்திரா, வைரல் வீடியோ, மனஉறுதி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்