"எப்போ நம்பர் 1 பணக்காரரா ஆவிங்க?"... நெட்டிசனின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் ‘நச்’ பதில்.. நெகிழ்ந்துபோன இணையவாசிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எப்போது நம்பர் 1 பணக்காரராக ஆவீர்கள்? என கேட்ட நெட்டிசன் ஒருவருக்கு ஆனந்த் மஹிந்திரா அளித்த பதில் பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

"எப்போ நம்பர் 1 பணக்காரரா ஆவிங்க?"... நெட்டிசனின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் ‘நச்’ பதில்.. நெகிழ்ந்துபோன இணையவாசிகள்..!
Advertising
>
Advertising

Also Read | ஆமா.. இப்போ என்ன நடந்துச்சு?.. ஆண்டர்சனின் பந்தில் சிதறிய ஸ்டம்ப்.. திகைச்சு போய் நின்ன ரிஸ்வான்.. தெறி வீடியோ..!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Anand Mahindra Reply to Netizen about Richest Person In India

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவிடம் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். விக்ராந்த் சிங் என்ற அந்த நபர் ஆனந்த் மஹிந்திராவிடம்," நீங்கள் இந்தியாவில் தற்போது 73 வது பணக்காரராக இருக்கிறீர்கள். எப்போது முதல் இடத்தை பிடிப்பீர்கள்?" எனக் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும் ஆனந்த் மஹிந்திரா,"உண்மை என்னவென்றால், நான் ஒருபோதும் அத்தகைய நிலையை அடையமாட்டேன். ஏனென்றால் இது என் விருப்பமாக இருந்ததில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதுவரையில் இந்த ட்வீட்டை 16,000 பேர் லைக் செய்திருக்கின்றனர். இந்த பதிவில் நெட்டிசன்கள்,"கழுகு எப்போதும் மேகத்திற்கு மேலே பறக்கிறது. தரவரிசைகள் எப்போதும் தேவைப்படுபவர்களுக்கானது. உங்களுக்கு கண்டிப்பாக இது தேவையில்லை. நீங்கள் உருவாக்கியது இந்தியாவில் பல பணக்காரர்களை உருவாக்கும்" என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,"பெரிய மனத்துடையவர்கள் எப்பொழுதும் நம் நாட்டைப் பற்றியும் தேசத்திற்கான அவர்களின் பங்களிப்பைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.

உங்களையும் ரத்தன் டாடாவையும் இதன் காரணமாகவே நாங்கள் எப்போதும் போற்றுகிறோம்.. நீங்கள் நீண்ட காலம் பாதுகாப்புடன் வாழ்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Armaan Malik : ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்.. போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட யூடியூப் பிரபலம்.!

ANAND MAHINDRA, RICHEST PERSON, RICHEST PERSON IN INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்