"தாண்டவம்.." ரிஷப் பண்ட் பேட்டிங் பாத்து மிரண்டு போய்.. ஆனந்த் மஹிந்திரா சொன்ன வார்த்தை.. இணையத்தில் இப்போ செம வைரல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் குறித்து தெரிவித்துள்ள கருத்து, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ருத்ர தாண்டவம் ஆடிய பண்ட்

இதன் பின்னர், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், சுமார் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்திருந்தது. டெஸ்ட் போட்டி என்ற போதும், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், 111 பந்துகளில் 146 ரன்கள்.சேர்த்தார். சிக்ஸர்கள், பவுண்டரிகள் என அவர் பறக்க விட, இந்திய அணியும் சிறந்த ஸ்கோரை எட்டி இருந்தது.

தொடர்ந்து, தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் பின்னர், 132 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிகபட்சமாக புஜாரா 66 ரன்களும், ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்திருந்தனர்.

விறுவிறுப்பான கட்டத்தில் டெஸ்ட் போட்டி

தொடர்ந்து, இந்தியா நிர்ணயித்த 378 ரன்களை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால், போட்டி எந்த பக்கம் திரும்பும் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ரிஷப் பண்ட்டின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பண்ட்டை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திராவின் டைம்லைன், எக்கச்சக்க வீடியோக்கள் மற்றும் பாசிட்டிவ் செய்திகளால் நிரம்பி இருக்கும். தன் கண்ணில் படும் பல நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில், ட்விட்டரில் பகிர்வார் ஆனந்த் மஹிந்திரா. அதே போல, சிறந்த திறனை வெளிப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர் பற்றிய செய்தியை பகிர்ந்து பாராட்டவும் செய்வார்.

அந்த வகையில், கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடுள்ள ஆனந்த் மஹிந்திரா, ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய ஷாட்கள் தொடர்பான புகைப்படங்களின் Collage-ஐ ட்விட்டரில் பகிர்ந்து, "டெஸ்ட் கிரிக்கெட் தாண்டவம். ரிஷப் பண்ட் ஒரு விளையாட்டு கலைஞர். அவரை பார்த்து வியக்காமல் இருப்பது சாத்தியமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்